கடந்த மே மாதம் 13 ஆம் தேதி ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசை கச்சேரி குறித்து சைந்தவி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில் ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பலருக்கும் விருப்பமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தனர். சிறு வயதில் இருந்தே காதலித்து திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு திருமண பணத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ், சைந்தவி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழும் ஜிவி பிரகாஷ் குமாரும், பிரபல பின்னணி பாடகியான சைந்தவியும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர தம்பதியினருக்கு அன்வி என்ற மகளும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் தாங்கள் பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்தனர். தங்களின் 11 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக இருவரும் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர்களின் பிரிவு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
தனுஷ் பெயர் இல்லாமல் வெளியான அடுத்த அறிக்கை..நன்றி தெரிவித்து நெகிழ்ந்த நயன்தாரா!
இதனால் சைந்தவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் ஒருவரின் கேரக்டரை சிதைப்பபு ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களின் பிரிவு தொடர்பாக பரப்பப்படும் வதந்திகள் வருத்தம் அளிக்கிறது. நானும் ஜிவியும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 ஆண்டுக்கால நட்பு. அதே நட்புடன் இனிமேலும் பயணிப்போம்’ என பதிவிட்டு இருந்தார்.
தல வேண்டாம் AK…உலகநாயகன் வேண்டாம் KH
இந்நிலையில் தான் சொன்னதை போன்றே பிரிவிற்கு பின்னரும் ஜிவி பிரகாஷ் உடன் நட்பு பாராட்டுவதை தற்போது வீடியோ ஒன்றில் மூலமாக வெளிப்படுத்தி உள்ளார் சைந்தவி. அதாவது பிரிவிற்கு பின்பாக ஜிவி பிரகாஷுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘டிசம்பர் 7ம் தேதி ஜி.வி. பிரகாஷ் சாரின் லைவ் கான்செர்ட் ‘Celebration of Life’ மலேசியாவில் உள்ள ஹோக்கி நேஷனல் ஸ்டேடியமில் நடக்க இருக்கிறது.
உங்களை நான் இந்த கான்செர்ட்டில் சந்திக்கப் போகிறேன். ஆடல், பாடல், கொண்டாட்டம் என அனைத்தும் இருக்கப்போகும் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்யுங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வாருங்கள். மலேசியாவில் சந்திப்போம்’. இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார் ஜிவி பிரகாஷ். திருமண உறவில் இருந்து பிரிந்தாலும் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் தொடர்ந்து நட்பு பாராட்டி வருவது பலர் மத்தியிலும் கவனம் ஈர்த்து வருவதுடன், பாராட்டுகளையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.