புதிய படங்களில் நடிக்க தனுஷுக்கு தடை, திரைச்செய்தி செய்திகள் – தமிழ் முரசு Cinema News in Tamil, Tamil Murasu

0

The Tamil film producers association has banned actor Dhanush from taking on new films due to his alleged political involvement and neglect of signed projects, including his own directorial debut, “Idli Shop.” The ban was prompted by complaints from the association’s president, Murali Ramasamy, but it has been questioned by former president K.R.R. as potentially unlawful. Dhanush remains busy with several films in production and has recently seen success with the release of “Rayan.”

முன்பே ஒப்பந்தமான படங்களில் மட்டுமே தனுஷ் நடிக்க வேண்டும் என தனுஷுக்கு தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்லா இய க்கத்தில் ‘குபேரா’வில் நடிக்கிறார் தனுஷ்.

மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இசைஞானி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தில் இளையராஜாவாகவே நடித்து வருகிறார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘ராயன்’ படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றிபெற்றது. மேலும், ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார் தனுஷ்.

ஏற்கெனவே, இவர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். விரைவில் திரைகாணும் எனக் கூறப்படுகிறது.

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்-2’ படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் தனுஷ்.

இத்தனை படங்களைக் கைவசம் வைத்திருந்தாலும், தனது ‘இட்லி கடை’ படத்தில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம்.

தமிழ் சினிமா பல்வேறு வர்த்தகச் சிக்கலில் சிக்கியுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி (முன்னாள் தலைவர் இராம.நாராயணன் மகன்).

ஆனால், சங்கத்தில் நிலவும் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக, தனுஷுக்கு தடை உள்ளிட்ட தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் செய்வதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

சரியான காரணம் இல்லாமல் மற்றவர்களுக்கு தொழில் தடை விதிப்பது, சட்டத்துக்கு எதிரான செயல்பாடு என்பது தயாரிப்பாளர் சங்கத் தலைவருக்குத் தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் திரைப்படச் சங்க முன்னாள் தலைவரான கே.ஆர்.

Share.

Leave a Reply