புஷ்பா 2 படம் எப்படி இருக்கு?.. 3 ஹீரோயின்கள்.. அல்லு அர்ஜுன் கலக்கிட்டார்.. பிரபலம் சொன்ன விமர்சனம்

0

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் புஷ்பா 2. இந்த்ப் படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது. முக்கியமாக தெலுங்கு திரையுலகில் இருந்து 1000 கோடி ரூபாயையும் பான் இந்தியா அளவில் வசூல் செய்தது. எனவே புஷ்பா 2 மீது அதீத ஆர்வம் ரசிகர்களுக்கு இருந்தது. இந்தச் சூழலில் படமானது இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்துக்கு இதுவரை ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன.

இந்திய சினிமாவை பொறுத்தவரை பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என்றுதான் வகைப்படுத்துவார்கள். தெலுங்கு சினிமா என்றாலே ஓவர் மசாலா, கமர்ஷியல், லாஜிக் மீறல்கள் என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்ததுண்டு. இப்படிப்பட்ட சூழலில் சில ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்தன. அதனையடுத்து தெலுங்கு சினிமா என்றாலே புஷ்பா படம் ஒரு அடையாளமாக மாறியது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தர். அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார்.

மெகா ஹிட்: புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது. படத்தின் பாடல்கள், மேக்கிங் என அனைத்து ஏரியாவிலும் படம் அருமையாக இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள். அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் பான் இந்தியா அளவி ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூலித்தது. முக்கியமாக அல்லு அர்ஜுனுக்கு இந்தப் படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. இத்தனை வருட சினிமா வரலாற்றில் தெலுங்கிலிருந்து அல்லு மட்டும்தான் முதன்முறையாக தேசிய விருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Nagarjuna: மகனுக்கு ரெண்டாவது திருமணம்..எமோஷ்னலாக வாழ்த்து சொன்ன நாகர்ஜுனா! நீங்களே பாருங்க!

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

பெரும் எதிர்பார்ப்பு: இப்படி ஏகப்பட்ட சிறப்புகளையும், தெலுங்கு சினிமாவின் மார்க்கெட்டை பான் இந்தியா அளவில் உயர்த்தியது புஷ்பா படம். சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதிலும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் என முதல் பாகத்தில் நடித்தவர்களே நடித்திருந்தார்கள். ஏற்கனவே முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இன்று ரிலீஸ்: கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து ஒருவழியாக இன்று படம் ரிலீஸாகியிருக்கிறது. பான் இந்தியா அளவில் இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க படம் பார்த்த ரசிகர்களோ தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் புஷ்பா 2 படத்தின் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

Pushpa 2 Public Review: புஷ்பா 2 பத்திக்கிச்சா? இல்ல.. பதறவெச்சுச்சா? ரசிகர்கள் சொல்வது என்ன?

பயில்வான் விமர்சனம்: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த விமர்சனத்தில், “வட இந்தியாவிலிருந்து வரும் படங்கள்தான் வசூலில் சாதனை படைக்கும். ஆனால் பாகுபலி படத்துக்கு பிறகு RRR, புஷ்பா 1 படங்கள் வசூல் சாதனை புரிந்தன. புஷ்பா 2வும் ரிசர்வேஷனிலேயே பல கோடி ரூபாயை சம்பாதித்தது. இந்தப் படத்தின் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ராஷ்மிகா மந்தனாவும், ஸ்ரீலீலாவும் போட்டிப்போட்டு ஆடியிருக்கிறார்கள். மூன்றாவது ஹீரோயின் யார் தெரியுமா?.. அது அல்லு அர்ஜுன் தான். அவரும் லேடி கெட்டப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

மிஞ்சிவிட்டார்: அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் கலக்கியிருக்கிறார். அவர் வரும் சீனில் எல்லாம் தியேட்டரில் இருக்கும் ரசிகர்கள் துள்ளி குதிக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் படம் வசூலை அள்ளி குவிக்கப்போகிறது. ஒரு கமர்ஷியல் எண்ட்டெர்டெயினருக்கு இந்தப் படத்தின் மூலம் இலக்கணம் எழுதியிருக்கிறார் சுகுமார். அதேபோல் நடிப்பு ராட்சசன் ஃபகத் பாசில் வேற லெவலில் செய்திருக்கிறார். மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் படம் ஓடுகிறது. ஆனால் படம் பார்க்கும்போது எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. நிச்சயம் இந்தப் படம் வசூல் சாதனை செய்யும்” என்று ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறார்.

Share.

Leave a Reply