போடு வெடிய.. விஜய்யின் கடைசி படத்தில் சூப்பர் ஸ்டார்: வெளியான கொல மாஸ் தகவல்!

0

எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தளபதி 69’ படம் குறித்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி 69

விஜய்யின் நடிப்பில் தற்போது ‘தளபதி 69’ படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ரிலீசான ‘கோட்’ படத்தினை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய்யின் கடைசி படம் என கூறப்படுவதால் ‘தளபதி 69’ மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் கடைசி படம் குறித்து மரண மாஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடைசி படம்

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றினை துவங்கினார். இதனையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் விஜய்யின் கடைசி படமாக கூறப்படும் எச். வினோத் இயக்கத்தில் ‘தளபதி 69’ உருவாகவுள்ளது. இப்படத்தினை கேவிஎன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அற்புதமான கேரக்டர்

‘தளபதி 69’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், விஜய்யின் கடைசி படமாக கூறப்படும் ‘தளபதி 69′-ல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கன்னட நடிகர் சிவராஜ் குமார், தளபதி 69’ படத்தில் ஒரு அற்புதமான கேர்கடரில் நடிப்பதற்கு என்னை கேட்டிருக்கிறார்கள்.

சிவராஜ் குமார்

என்னுடைய தேதி பிரச்சனைகள் காரணத்தால், அப்படத்தில் நடிப்பேனா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால், எப்படியாவது சமாளித்து நடித்து விடுவேன் என நம்புகிறேன். விஜய் ஒரு சிறந்த நடிகர். இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து மாஸான காட்சிகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிவராஜ் குமார் அமோக வரவேற்பினை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாபி தியோல்

‘தளபதி 69’ படப்பிடிப்பினை முழு வீச்சில் நடத்தி கொண்டிருக்கிறார் எச். வினோத். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், இயக்குனர் கெளதம் மேனன், நரேன், பிரியாமணி மற்றும் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜு உள்ளிட்டோரும் ‘தளபதி 69’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply