Mollywood Cinema : மலையாள மொழியில் வெளியான முதல் கலர் திரைப்படத்தை இயக்கியது கோவையை சேர்ந்த ஒரு மெகா ஹிட் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியை பொறுத்தவரை கடந்த 1918ம் ஆண்டு ஆர். நடராஜ முதலியார் என்பவருடைய இயக்கத்தில் வெளியான “கீச்சக்க வதனம்” என்கின்ற திரைப்படம் தான் முதல் தமிழ் திரைப்படமாக, அதுவும் மௌனமான சைலன்ட் திரைப்படமாக வெளியானது. அதன் பிறகு தொடர்ச்சியாக சில திரைப்படங்கள் ஓசை இல்லாமல் வெளியான நிலையில், கடந்த 1931ம் ஆண்டு எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளியான முதல் பேசும் தமிழ் திரைப்படம் தான் “காளிதாஸ்”. 1918 ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 116 வருடங்களாக தமிழ் மொழி திரைப்படங்கள் பல்வேறு பரிமாணங்களை அடைந்து வருகின்றது. இந்திய திரை உலகை பொறுத்தவரை கோலிவுட் உலகிற்கு என்று ஒரு தனி அந்தஸ்து உலக அரங்கில் எப்போதும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.