சென்னை: ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இயக்குநராகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படம் உருவாகி வரும் நிலையில், அதற்கு நடுவே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிராகன் படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பேக் டு பேக் ஹிட்டாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டிராகன் என இரு படங்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு வெளியாக காத்திருக்கின்றன.
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து வரும் பிரதீப் ஆண்டனிக்கு ஏற்கனவே அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் இன்னொரு மலையாள நடிகையும் தற்போது ஜோடி சேர்ந்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனுக்கு 2 ஹீரோயின்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து வெளியான ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் அதே போல தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கி வரும் டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனை தொடர்ந்து மற்றொரு மலையாள நடிகையான கயாடு லோஹர் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை எல்லா வகையிலும் டிராகன் படம் ஓவர்டேக் செய்துக் கொண்டே போகிறதே என்றும் இந்த படம் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.