லாபமா ? நஷ்டமா ? கங்குவா ரிப்போர்ட் இதோ..!

0

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக தயாரான திரைப்படம் தான் கங்குவா. சூர்யாவின் திரைப்பயனத்திலேயே அதிக பொருட்ச்செலவில் தயாரான படம் தான் கங்குவா. மேலும் தமிழ் சினிமாவில் உருவாகும் முதல் பான் இந்திய படம், சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம், அதிக மொழிகளில் வெளியாகும் படம் போன்ற பல சிறப்பம்சங்களை கங்குவா கொண்டிருந்தது.

எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதுமட்டுமல்லாமல் படக்குழு இந்தியா முழுவதும் இப்படத்தை ப்ரொமோட் செய்தனர். குறிப்பாக இப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரின் படமும் ஆயிரம் கோடி வசூல் செய்திராத நிலையில் சூர்யாவின் கங்குவா அந்த சாதனையை நிகழ்த்துமா ? என ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலாக இருந்தது.

SK25 திரைப்படத்தால் சிவகார்த்திகேயனின் பலநாள் ஆசை நிறைவேறியுள்ளது..!

ஆனால் இப்படம் வெளியானத்திலிருந்து கடுமையான ட்ரோல்களையும் விமர்சனங்களையும் மட்டுமே சந்தித்து வருகின்றது. இது சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகத்திற்கு ஏமாற்றத்தை கொடுத்தது. என்னதான் இப்படத்தின் முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் குறைந்தது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

படத்தில் சில காட்சிகளை ட்ரிம் செய்தும் ,சௌண்டை குறைத்தும் எந்த பயனுமில்லை, வசூலில் எந்த ஏற்றமும் இல்லை. இந்நிலையில் 350 கோடி பட்ஜெட்டில் தயாரான கங்குவா திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்ததா ? இல்லை நஷ்டத்தை ஏற்படுத்தியதா ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. அதன்படி இப்படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரங்களிலேயே தயாரிப்பாளர் பட்ஜெட்டில் பாதி பணத்தை பெற்றுவிட்டாராம்.

தல வேண்டாம் AK…உலகநாயகன் வேண்டாம் KH

அதன் பிறகு இப்படம் இதுவரை 130 கோடி வசூலித்துள்ளது. அதை வைத்து பார்க்கையில் இப்படத்திற்காக போட்ட பணத்தை தயாரிப்பாளர் எடுத்திருப்பார் என்றே தெரிகின்றது. ஆனால் கங்குவா தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபகரமான படமாக இருந்ததா ? என்றால் அந்தளவிற்கு இல்லை என்றுதான் தெரிகின்றது. எந்த லாபமும் இன்றி அதே சமயத்தில் நஷ்டமும் இல்லாமல் கங்குவா அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இது உண்மையான தகவலாக இல்லாமல் வெறும் கணிப்பு மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply