வருட திருமண வாழ்க்கையை முறித்த ஏ.ஆர். ரகுமான்-சாய்ரா

0

காதலுக்கே தனது இசையால் உயிர் கொடுத்த ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து அறிவிப்பு…அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது கோலிவுட் வட்டாரத்தையே வருந்தச் செய்துள்ளது…

காரணம்…ஒன்றா…இரண்டா…எண்ணிலடங்கா காதல் பாடல்களையும், காதலை பிரியும் வலிமிகுந்த பாடல்களையும் கொடுத்து மெய்மறக்க செய்திருக்கிறார் ஏ.ஆர். ரகுமான்…

காதலுக்கு வலுசேர்க்கும் பாடலாக இருந்தாலும் சரி, காதல் தோல்வி பாடலாக இருந்தாலும் எவ்வித எமோஷனுக்கும் தனது இசையால் விருந்தளித்தவர் ஏ.ஆர். ரகுமான்…

இப்படி ரசிகர்களுக்கு பல பாடல்களை கொடுத்த அவர், தனது விவாகரத்து குறித்து பதிவிட்ட உருக்கமான பதிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

தனது 30வது வருட திருமண வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்த அவர் வலியுடன் அந்த பதிவை வெளியிட்டிருக்கிறார் என்பது வார்த்தைகளிலேயே வெளிப்பட்டது..

அவர் வெளியிட்ட பதிவில், எங்கள் திருமண பந்தத்தின் 30வது வருடத்தில் இணைந்தே பயணிப்போம் என நம்பினோம்..ஆனால் எதிர்பாராத முடிவே மிஞ்சியது…

கடவுளின் சிம்மாசனம் கூட, நொறுங்கிய இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும்..நொறுங்கிய இதயத் துகள்கள் மீண்டும் இணையாத சூழலில், நாங்கள் அர்த்தத்தையே தேடுகிறோம்..

வாழ்க்கையின் பலவீனமான அத்தியாயத்தை கடந்து செல்லும் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி என உருக்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.

இப்படி வரிக்கு வரி..தங்கள் வலியின் ஆழத்தை எடுத்துரைத்துள்ள ஏ.ஆர். ரகுமானின் பதிவை கண்டு புலம்பி வருகின்றனர் அவரது ரசிகர்கள்…

இது மட்டுமில்லாமல், ஏ.ஆர். ரகுமான் மற்றும் சாய்ரா இணைந்து பங்கேற்ற நேர்காணல்கள், விருது விழாக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து ஆதங்கப்பட்டு வரும் ரசிகர்கள்..மீண்டும் இணைவது குறித்து இருவரும் பரிசீலிக்க வேண்டும் என கோருகின்றனர்…

மற்றொரு புறம் இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால், இது குறித்து விவாதிக்காமல் அவர்களின் முடிவை மதித்து பிரைவசி கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர் இணையவாசிகள்..

Share.

Leave a Reply