சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. சூர்யாவிற்கு கங்குவா மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் தோல்வியை சந்தித்தது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே சூர்யா அடுத்ததாக நடித்து வரும் திரைப்படமாவது அவரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வருமா ? என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் இருக்கின்றனர்.தற்சமயம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகின்றார். சூர்யா 44 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என தெரிகின்றது.
பிகில் vs கைதி பஞ்சாயத்து..கதறவிட்டது யார் ? தயாரிப்பாளருக்கு பதிலளித்த விஜய் ரசிகர்கள்..!
இதையடுத்து சூர்யா ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் தன் 45 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்கும் என தெரிகின்றது. சூர்யா மற்றும் ஆர்.ஜே பாலாஜியின் காம்போவில் உருவாகும் இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கின்றனர். கண்டிப்பாக இப்படம் வித்யாசமான ஒரு படைப்பாக இருக்கும் என்றே தெரிகின்றது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
இந்நிலையில் சூர்யா 45 திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி ரசிகர்கள் தற்போதே விவாதிக்க துவங்கிவிட்டனர். அதன்படி சூர்யா 45 திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் சிறப்பாக இருக்கும் என்பதே சூர்யா ரசிகர்களின் ஆசையாக உள்ளது. பண்டிகை நாட்களில் சூர்யாவின் படங்கள் வெளியாகி பல காலம் ஆகிவிட்டது.
எனவே சூர்யா 45 திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் அது சூர்யாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும். எனவே தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா 45 திரைப்படம் வெளியாகவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். படக்குழுவும் சூர்யா 45 திரைப்படத்தை பண்டிகை நாட்களில் வெளியிடவே திட்டமிட்டு வரும் என்று கருதப்படுகின்றது.
தல வேண்டாம் AK…உலகநாயகன் வேண்டாம் KH
அவ்வாறு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா 45 வெளியானால் விஜய்யும் சூர்யாவின் மோத நேரிடும் என தெரிகின்றது. விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 அடுத்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தான் வெளியாகவுள்ளது. எனவே சூர்யா 45 திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் பல வருடங்கள் கழித்து சூர்யா மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் வாய்ப்பு அமையும். அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.