தமிழ் சினிமாவில் இயக்குநர்களுக்கு என்று தனித்துவமான சரித்திரம் இருக்கிறது. ஒரு படைப்பு வெற்றி பெறுகிறது என்றால்… அதனுடைய மூல கதையை சிந்தித்த கதாசிரியரை விட அதனை பார்வையாளர்களுக்கு பொருத்தமான முறையுடன் வழங்கிய இயக்குநர் தான் அதன் முதல் வெற்றியாளர். அந்த வகையில் கதாசிரியராகவும், இயக்குநராகவும் வெற்றி பெற்ற பாலாவுக்கு அவர் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி கால் நூற்றாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படக் குழுவினர் ‘பாலா 25’ என்ற பெயரில் பாராட்டு விழாவினை ஒருங்கிணைத்தனர்.
இந்த விழாவிற்கு தமிழ் திரையுலகமே திரண்டு வருகை தந்து பாலாவை வாழ்த்தியது. வார்த்தைகளால் கொண்டாடியது. ரசிகர்களை பரவசப்படுத்திய அந்நிகழ்வின் சில முக்கிய அம்சங்களை காண்போம்.
சென்னை வர்த்தக மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் – ஆகிய சங்கங்களின் சார்பில் ஏராளமான பிரபலங்கள் பங்குபற்றினர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் பங்கு பற்றிய நிர்வாகிகள் பாலாவிற்கு பொன்னாடை போற்றி கௌரவித்தனர். இந்நிகழ்வில் இந்தியாவின் முத்திரை பதித்த படைப்பாளியான மணிரத்னம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
நந்தா, பிதாமகன் ஆகிய படங்களின் மூலம் நடிகர் சூர்யாவிற்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்த பாலாவின் விழா என்பதால்.. எந்த கருத்து வேறுபாட்டிற்கும் இடமளிக்காமலும்… ஈகோவிற்கு இடமளிக்காமலும் நடிகர் சூர்யா இந்நிகழ்வில் பங்கு பற்றி பாலாவை பற்றி பகிர்ந்து கொண்ட விடயங்கள்… ரசிகர்கள் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷமாக இருந்தது.
பாலா – படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திர நடிகர்களை உடலியல் ரீதியாக துன்புறுத்துவார். இருந்தாலும் அவருடைய இயக்கத்தில் நடித்த பிறகு நடிகர்கள் நட்சத்திரங்களாக பிரகாசித்திருக்கிறார்கள். இதனையும் மேடையில் பகிர்ந்துகொண்டார்கள்.
இயக்குநர் பாலா – விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் ஆகியோரின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ஆனால் ‘பாலா 25 ‘ என கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் சூர்யா மட்டுமே பங்கு பற்றினார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ‘சேது’ படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் திரையுலக பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய பாலாவின் விழாவில்… பாலாவிற்காக நடைபெறும் விழாவில்… நடிகர் விக்ரம் பங்கு பற்றாதது.. அவரைப் பற்றிய தவறான பிம்பம் பார்வையாளர்களிடம் ஏற்பட்டது. சிலர் விக்ரம் தன் மகனுக்காக வாழ்க்கை கொடுத்தவரை பகைத்துக் கொண்டு, ஈகோவை விடாமல் இந்நிகழ்வில் பங்குபற்றாதது தவறுதான் என பகிரங்கமாகவே பேசினர்.
இயக்குநர் மிஷ்கின்… எழுத்தாளர் பவா செல்லதுரை, அஜயன் பாலா, யூகி சேது, சிங்கம் புலி ஆகியோரை மேடையில் ஏற்றி பாலாவை பற்றி பகிர்ந்து கொள் கொள்ள சொன்ன விடயங்கள்.. அனைத்தும் பார்வையாளர்களுக்கு புதிதாக இருந்தது. அதிலும் குறிப்பாக சிங்கம் புலி பகிர்ந்து கொண்ட பல விடயங்கள் சுவாரசியமானதாக இருந்தது. அதிலும் இயக்குநர் யூகி சேது.. பாலாவின் திரைக்கதை பாணி குறித்து விவரித்த விதம் வியப்பை அளித்தது.
பாலா சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மனித உணர்வுகளுடன் குழைத்து படைப்பாக வழங்குவதில் தன்னிகரற்ற படைப்பாளி என்பதை மேடை ஏறிய ஒவ்வொருவரும் தங்களுடைய கோணத்தில் சொன்னது. பாலா 25 ஆண்டுகள் நிறைவு செய்திருந்தாலும் என்றென்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பார் என்பதை உறுதிப்படுத்தியது.