வேலை விஷயத்தால் உச்சகட்ட பதட்டத்தில் தங்கமயில்..பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்..!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ராஜி இருவரும் கண்ணனை போலீஸ் ஸ்டேஷனில் பார்க்கின்றனர்.மறுபக்கம் தங்கமயில் பதட்டத்தில் இருக்கின்றார்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் ஒரு பெண்ணை சிலரிடமிருந்து காப்பாற்றுகிறார். இதனால் கதிர் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள ராஜியின் சித்தப்பா மற்றும் குமரவேலு வாய்விட்டு சிரித்து பாண்டியனை அவமானப்படுத்தும் விதமாக பணம் காசு சம்பாதிக்க வேண்டும் என்று கடத்தல் பிசினஸ் செய்யும் அளவிற்கு துணிந்து விட்டார்கள் என்று அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன் என் மகன் எந்த தவறும் பண்ணவில்லை என்று நிரூபித்து அவனை நான் வெளியே கூட்டிட்டு வருகிறேன் என்று சவால் விடுகிறார்.

அதிலிருந்து கதிரை ராஜி காப்பாற்றுகிறார். இதையடுத்து பாண்டியன் சொன்னபடி தங்கமயிலை கூட்டிட்டு சரவணன் வேலை விஷயமாக ஸ்கூலுக்கு போகிறார். ஆனால் போகும் வழி முழுவதும் தங்கமயில் இந்த வேலை வேண்டாம் என்று சொல்லி பார்க்கிறார்.

தமிழ் சினிமா 2024 ..எதிர்பார்ப்பின்றி வெளியாகி சர்ப்ரைஸ் ஹிட்டடித்த திரைப்படங்கள் ஒரு பார்வை..!

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத சரவணன், பாண்டியன் சொன்னபடி அந்த பள்ளிக்கூடத்திற்கு போய் பேச வேண்டிய ஆளை பார்த்து பேசி விடுகிறார்கள். அதன்படி தங்கமயிலிடம் சில கேள்வி கேட்டதும் பாண்டியனுக்காக உங்களுக்கு வேலை உண்டு. திங்கட்கிழமையிலிருந்து வேலைக்கு வந்து விடுங்கள் என்று சொல்லி விடுகிறார்.

ஆனால் தங்கமயில் படிக்காமல் இருப்பதால் எப்படி வேலை பார்ப்பது என்று தெரியாமல் பதட்டத்துடன் பயப்பட்டு வருகிறார்.மறுபக்கம் கதிருக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வருகின்றது.காணாமல் போன நகை கிடைத்துவிட்டதாகவும் ,திருடியவனை பிடித்ததாகவும் சொல்கின்றனர்.

இந்த விஷயத்தை கதிர் ராஜியிடம் சொல்ல இருவரும் போலீஸ் ஸ்டேஷனிற்கு கிளம்புகின்றனர்.வீட்டில் சொன்னால் பயப்படுவார்கள் என்பதால் வெளியே ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வருகின்றோம் என கோமதியிடம் கூறினார்கள்.கோமதியும் இருவரும் சந்தோஷமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு நிம்மதி அடைகின்றார்.

கதிர் மற்றும் ராஜி இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த நிலையில் ராஜியை ஏமாற்றிவிட்டு நகையை பறித்துவிட்டு போன கண்ணனை காட்டுகிறார்கள்.

தளபதி 69 ரிலீசுக்கு முன்பை வசூலை தொடங்கி மாஸ் காட்டி வருகிறது

கண்ணனை பார்த்ததும் உச்சகட்ட ஆவேசத்தில் ராஜி இருக்கிறார். ஆனாலும் கண்ணன் நகையும் பணத்தையும் செலவழித்து விட்டார் என்று கூறிவிட்டார்.இதைத்தொடர்ந்து என்னென்ன திருப்பங்கள் நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply