கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படும் நயன்தாரா, அண்மைக் காலமாக டாக் ஆஃப் தி டவுனாக மாறி வருகிறார்…
தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என விளக்கமளித்து கவனம் ஈர்த்த அவர், தனது திருமண ஆவணப்படத்திற்கு தனுஷ் அனுமதி தரவில்லை எனக் கூறி அறிக்கை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி பெரும் விவாதத்தை கிளப்பினார்..
அடுத்தடுத்த அதிரடிகளால், கோலிவுட் வட்டாரத்தை பிசியாக வைத்திருந்த அவர், அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார்.
இந்த சூழலில் தான், யோகி படத்தில் பிரபாசுடன் நடித்திருந்த நயன்தாரா 17 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடன்ஸ், டாக்சிக், ராக்காயி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நயன், பிரபாஸ்-ன் ‘த ராஜா சாப்’ படத்தில் இணைகிறார்…
மாருதி இயக்கும் இப்படத்தில் பிரபாஸ்-உடன் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில், படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நயன் தாரா நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது… இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம், ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக சிவாஜி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் அவர் நடனமாடியிருந்த நிலையில், அந்த இரண்டு பாடல்களுமே படு ஹிட்….
தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் என்பது தனி கவனம் பெறுகிறது…
ஏற்கனவே, முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா, ஸ்ரீலீலா, திரிஷா ஆகியோரும் தங்களது சார்பில் டாப் கதாநாயகர்களின் படங்களில் ஒரு ஹிட் பாடலை கொடுத்துள்ளனர்..
அதேபோல் பிரபாஸின் படத்தில் நடனமாடவுள்ள நயன்தாராவும் ஹிட் பாடலை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்….