ஐதராபாத்: தற்காலங்களில் பிரபலங்கள் இடையில் திருமணமும் அதிகரித்து வருகிறது. இதேபோல விவாகரத்துக்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ரம்யா பாண்டியன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைத்தன்யா சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவுள்ளார். இவரது தம்பி அகிலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதனிடையே இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் திருமணமும் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர் பென்மேட்சா சுப்புராஜுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்துவரும் இவர் தனது 47வது வயதில் தற்போது திருமணம் முடித்துள்ளார்.
அதிகரிக்கும் திருமணங்கள்: நடிகர்கள், நடிகைகள் அடுத்தடுத்து திருமண வாழ்க்கையில் ஈடுபடுவதும் விவாகரத்து குறித்து அதிரடியாக முடிவெடுப்பதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. கோலிவுட், பாலிவுட் என்ற எந்தவிதமான பேதமும் இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இன்றைய தினம் தனுஷ் -ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இதேபோல முன்னதாக நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நடிகர் நாக சைத்தன்யா, அடுத்த மாதத்தில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவுள்ளார். அவரது தம்பி அகிலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சுப்பாராஜு திருமணம்: இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரம்யா பாண்டியன் ரிஷிகேஷில் தன்னுடைய காதலரை திருமணம் செய்துக் கொண்டார். இதனிடையே கீர்த்தி சுரேஷும் தன்னுடைய நீண்ட கால காதலரை அடுத்த மாதத்தில் திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் கோவாவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை இன்றைய தினம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் தேதி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பென்மேட்சா சுப்பராஜூ தற்போது திருமணம் முடித்துள்ளார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
47 வயதில் திருமணம்: தன்னுடைய 47வது வயதில் அவர் திருமணம் செய்து முரட்டு சிங்கிள் அடையாளத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சமி, போக்கிரி, சரவணா, ஆயுதம், ஆதி, பாகுபலி 2, அசுரகுரு ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தன்னுடைய திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சுப்புராஜூ, திருமணத்தையும் அறிவித்துள்ளார். இறுதியில் வென்றது என்று அவர் தன்னுடைய கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.
வரவேற்பு கொடுத்த பாகுபலி 2: கடந்த 2003ம் ஆண்டில் வெளியான கட்கம் என்ற படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் வில்லனாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து குறுகிய காலத்திலேயே மிகச்சிறப்பான வரவேற்பையும் அதிகமான படங்களையும் பெற்றிருந்தார். பாகுபலி 2 படமே இவருக்கு மிகச்சிறப்பாக அமைந்து ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. படத்தில் அனுஷ்காவின் முறைப்பையனாக வந்து மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார் சுப்புராஜூ.