சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. படத்தின் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படும் சூழலில் படத்தின் வியாபாரம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். அதற்கு முன்னதாக அவர் நடித்த வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கியதால்; இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் எதிர்பார்த்தபடி படம் இல்லை. முக்கியமாக ஸ்க்ரீன் ப்ளேவை தொய்வில்லாமல் கொண்டு செல்லும் வெங்கட் பிரபு இதில் சொதப்பிவிட்டார் என்று பலர் பேசினார்கள்.
தளபதி 69: முழுக்க முழுக்க விஜய் அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதால் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க; கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று கூறப்படுவதால்; நிச்சயம் தமிழ் சினிமா மறக்காத படமாகத்தான் இருக்கும் என்று இப்போதே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் சம்பவம்: வினோத் இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர். தனது முதல் படமான சதுரங்க வேட்டையிலேயே தன்னை நிரூபித்துவிட்டார். தொடர்ந்து அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களில் வலிமையை தவிர்த்து மற்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன. எனவே விஜய்யின் கடைசி படமான தளபதி 69ஐ இயக்குவதற்கு சரியான தேர்வு வினோத்தான் என்று ரசிகர்கள் கூற ஆர்மபித்திருக்கிறார்கள்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
தவெக மாநாடு: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. கட்சியின் முதல் மாநில மாநாடு சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்தது. லட்சக்கணக்கானோர் அதில் கலந்துகொண்டார்கள். மாநாட்டில் பேசிய விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன என்பது பற்றியும், தங்களது வழிகாட்டிகள் யார் என்பதை பற்றியும் விளக்கினார்.
தளபதி 69 வியாபாரம்: படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக நடிகை பூஜா ஹெக்டேவும் சென்னைக்கு வந்தடைந்திருக்கிறார். இந்நிலையில் தளபதி 69 படத்தின் வியாபாரம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஃபர்ஸ்ட் ஷெட்யூலே முடியல அதற்குள் இவ்வளவு வியாபாரமா என்று ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.