சென்னை: நேற்று தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு ஜோதிகா, சூர்யா, அதிதி சங்கர், ரம்யா பாண்டியன் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகை கிரண் ரத்தோர்,சுடிதாரில் தேவதை போல் வந்து தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளார்.
நடிகர் சியான் விக்ரமின் வெற்றிப்படத்தில் மிக முக்கியமான படங்களில் ஒன்று ஜெமினி. இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோர். விக்ரம் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தை சரண் இயக்கி இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
நடிகை கிரண் ரத்தோர்: ஜெமினி படத்தை தொடர்ந்து, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின் அஜித்துக்கு ஜோடியாக வில்லன் படத்திலும், பிரசாந்த்துடன் ‘வின்னர்’ படத்திலும், விஜயகாந்திக்கு ஜோடியாக தென்னவன் படத்திலும் கமிட்டாகி நடித்தார். கிரண் நடித்த அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றன. இதில் கிரண் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இந்தி, மலையாளம் மொழி படங்களிலும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.
காதல் தோல்வி: பிஸியாக நடித்து வந்த, கிரண், ஒருவரை காதலித்து வந்த நிலையில், அந்த காதல் தோல்வியாமல் திரைப்படத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இதையடுத்து, மீண்டும் இவர் சினிமாவிற்கு வர, அவருக்கு இருந்த மார்க்கெட் குறைந்து போனது. இதையடுத்து, விஜய்யின் கமர்ஷியல் ஹிட்டான ‘திருமலை’ படத்தில் ‘வாடியம்மா ஜக்கம்மா’ என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அதன்பிறகு எஸ்.ஜே சூர்யாவின் ‘நியூ’ படத்தில் மாமி கதாபாத்திரத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் முழுக்க டபுள் மீனிங் வசனம், கவர்ச்சி என விருந்து படைத்திருப்பார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
செம தீபாவளி வாழ்த்து: நியூ படத்துக்கு பின்னர் கவர்ச்சி நடிகையாக உருவெடுத்த கிரண், தமிழில் கதாநாயகியாக நடிப்பது குறைந்தது. மாறாக கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கோலிவுட் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களிலும் ஒரு கவர்ச்சி ரவுண்ட் வந்தார்.இப்போது பட வாய்ப்பும் குறைந்தபோதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார். தற்போது இவர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுகிறேன் என்ற டீப் லோ நெக் சுடிதாரில் குனிந்து நெளிந்து கவர்ச்சி பொங்க பொங்க தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.அந்த வீடியோவைப் பார்த்து உண்மையில் இது தான் சூப்பர் தீபாவளி வாழ்த்து என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.