ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ராபானு விவாகரத்து செய்யவதாக வழக்கறிஞர்கள் மூலம் நேற்று இரவு அறிவித்திருக்கிறார்கள். ஜிவி. பிரகாஷ், ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து அலையே ஓயாத நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்து செய்தி திரையுலகத்தை மட்டும் அல்லாமல் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. விவாகரத்துக்கு காரணமாக இவர்கள் என்ன சொல்கிறார்கள். ஏன் திருமணத்துக்கு பிறகு நீண்ட காலம் கழித்து விவாகரத்து பெறுவது அதிகரித்துவருகிறது?திரையுலகில் சிறந்த ஜோடிகள் என்று போற்றப்படுபவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானு தம்பதியும் உண்டு. இரண்டு மகள், ஒரு மகன் என மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருந்த இவர்கள் திருமணம் முடிந்து 29 ஆண்டுகள் கழித்து தற்போது விவாகரத்து செய்யவிருப்பதாக கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. திருமணத்துக்கு பிறகு நீண்ட கால வாழ்க்கைக்கு பிறகு தம்பதியர் ஏன் விவாகரத்து நோக்கி செல்கிறார்கள் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
திலீப்குமார் என்னும் பெயரை கொண்ட இவர் தனது 23 வது வயதில் இஸ்லாமிய மதத்தை தழுவி அல்லா ரக்கா ரஹ்மான் (ஏஆர் ரஹ்மான்) என்று தனது பெயரை மாற்றிகொண்டார். சிறுவயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்டவர். இவரது இசையில் ( தமிழில் முதல் படமான) வெளியான ரோஜா படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பட்டி தொட்டி முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களுக்கும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது. இளையராஜா போன்ற இசை ஜாம்பாவன்களின் குழுவில் இருந்து இசையமைப்பாளராக உருவெடுத்தாலும் தனது திறமையால் இளையராஜாவுக்கு இணையாக கொண்டாடப்பட்டு வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மான் சாயிரா பானு திருமணம்
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
1995 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று ஏ.ஆர்.ரஹ்மான் சாயிரா பானுவை கரம்பிடித்தார். இவர்களுக்கு கதீஜா, ரஹீமா என இரண்டு மகள்களும் அமீன் என்னும் மகனும் இருக்கிறார்கள். அவருடைய மூத்த மகள் கதீஜாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. கடந்த 29 வருடங்களாக பாலிவுட், கோலிவுட் பார்ட்டிகள், விருந்துகள், பிரபலங்களின் வீட்டு விசேஷங்கள் என அனைத்திலும் ஒன்றாக கலந்து கொள்ளும் சிறந்த ஜோடிகளில் இவர்களும் உண்டு. இவர்கள் இறுதியாக மும்பையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் தான் தாங்கள் இருவரும் பிரிவதாக தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் சாயிரா பானு விவாகரத்து
மகிழ்ச்சியான திருமண ஜோடியாக வலம் வந்த இவர்கள் விவாகரத்து செய்தி நேற்று அவர்களது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளிவந்தது. அது முதல் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் காரணத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
தாங்கள் விவாகரத்து செய்வதாக முடிவெடுத்திருப்பதாக சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலம் அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ட்வீட் செய்து தங்களது விவாகரத்து அறிவிப்பை உறுதி செய்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் சாயிரா பானு விவாகரத்துக்கு காரணம்
திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய சாய்ரா பானு முடிவெடுத்திருக்கிறார். ஒருவருக்கொருவர் அதிக அன்பு செலுத்திய நிலையில் இருவருக்குமிடையே அழுத்தங்களும் சிரமங்களும் நிரப்ப முடியாத அளவு பெரும் இடைவெளியை இருவரிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும் இதை யாராலும் நிரப்ப முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த சூழல் மிக கடினமானது. வேதனையானது. இந்த தருணத்தில் தனக்கு தனியுரிமை வேண்டும் என்றும் சாய்ரா பானு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதே போன்று ஏ.ஆர்.ரஹ்மானும் 30 வது திருமண ஆண்டை கொண்டாடுவோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் எதிர்பார்க்காத இந்த ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். இதனால் எங்கள் இதயங்கள் கனத்திருக்கிறது. இதில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்க செய்யும் என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஏஆர்ரஹ்மான் விவாகரத்து!ஏ.ஆர்.ரஹ்மான் சாயிரா பானு விளக்கம்
இருவருமே அழுத்தத்தாலும் பெரிய இடைவெளியாலும் இத்தகைய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இருவருமே கடினமான வேதனையான சூழலை எதிர்கொண்டிருப்பதாக கூறியிருப்பது பிரிய முடிவெடுத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானுவின் ஒற்றுமையை காட்டுவது ரசிகர்களின் மனதில் வேதனையை உண்டு செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.
பிரபலங்கள் என்பதால் இவர்களது வாழ்வு பொது இடங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் பல தம்பதியர் திருமணத்துக்கு பிறகு நீண்ட காலம் கழித்து விவாகரத்து கோர சொல்லப்படும் காரணங்கள் குறித்தும் ஒரு பார்வை பார்க்கலாம்.
திருமணம் முடிந்த 25 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து?
நீண்ட காலம் கழித்து விவாகரத்து என்பது கடினமாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். துணை பெரிய தவறை செய்ததன் காரணமாகவோ, இனி ஒருவர் மற்றவரை சார்ந்து அவருடன் இருக்க காரணம் தேவையில்லை என்பதாலோ திருமண உறவை முடிவுக்கு கொண்டு வரலாம். மேலும் இத்தகைய முடிவுக்கு பிறகு அது குறித்து சிந்திப்பது கடினமாக இருக்கலாம். அதே நேரம் ஒருவரையொருவர் புண்படுத்தும் அளவுக்கு சண்டை கொண்டிருந்தால் அது நீண்ட காலம் இருந்தால் 20 வருடங்களை கடந்த பிறகும் அது தொடர்ந்தால் விவாகரத்து குறித்து யோசிப்பது நல்லது.
25 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து செய்ய என்ன காரணம்?
காதல் இல்லை
குழந்தை, குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை என்று பகிர்ந்து கொண்டாலும் காதலில் இருந்து விலகி விவாகரத்து பற்றி சிந்திக்கலாம்.
பிடிக்காத திருமணம்
ஆரம்பம் முதலே நேசிக்காத திருமணத்தில் ஒருவரையொருவர் நேசிக்காமல் நீண்ட நாள் வாழமுடியாது. குழந்தைகள் சமூகத்துக்கு பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக தோன்றினாலும் 20 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற வாய்ப்பு அதிகம்.
துணைக்குள் துரோகம்
துணையிடம் துரோகம் என்பது வயதை பொறுத்து அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் துணை மற்றவரை ஏதோ ஒரு காரணத்துக்காக நாடும் போது அங்கு விவாகரத்து சாத்தியமாகிறது.
சுதந்திரம்
கூட்டாளிகளை அதிகம் சார்ந்துஇருக்கும் நிலையில் வயதாகும் போது சுதந்திரம் தேவைப்படலாம். பொருளாதாரம் ரீதியாக சுதந்திரம் மாறினால் விவாகரத்து எளிதாக இருக்கும்.
கடந்த கால பிரச்சனைகள்
தீர்க்கப்படாத கடந்த கால பிரச்சனைகள் பல வருடங்கள் ஆன பிறகு மீண்டும் தலைதூக்கலாம். உண்மையை எதிர்கொள்ளும் போது விவாகரத்து பெற விரும்புகிறார்கள்.
தொடர்பு கொள்வதில் சிக்கல்
திருமணமான தம்பதியர் பிரிய இது முக்கிய காரணம். ஒருவருக்கொருவர் தங்கள் பாசத்தையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த நேரம் தவறுதல் காரணமாக இருக்கலாம். இப்படி இன்னும் பல காரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.
ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானு விவாகரத்து மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
இருமணம் இணைந்து திருமணம் புரிந்து புரிதலுடன் கூடிய நீண்ட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து என்பது அந்த இருவருக்குமே மோசமான கடினமான முடிவு தான். 25 வருடங்களுக்கும் மேற்பட்ட புரிதலுடன் கூடிய வாழ்க்கையை ஒரு நொடிக்குள் முடித்துவிட இருவருமே விரும்பமாட்டார்கள். தீர்க்க முடியாத இடைவெளியால் விவாகரத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் அறிக்கை தெரிவித்திருக்கிறது. பிரபலங்கள் என்பதால் இந்த விவாகரத்து பேசப்படும் நிலையில் பிரபலம் அல்லாத பல தம்பதியரும் கூட காலம் கடந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிகொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் தம்பதியர் சிறு இடைவெளியையும் வளரவிடாமல் ஆரம்பத்திலேயே சரிசெய்வது மட்டுமே இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.