சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி.. இதென்னப்பா எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

0

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ ரிலீசாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. இதனையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் எஸ்கே, சுதா கொங்கரா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீசாக ‘அமரன்’ வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டு வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள இப்படம் பலரின் பாராட்டுக்களையும், ரசிகர்களின் அமோக வரவேற்பினையும் அள்ளி வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த மரண மாஸான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் தற்போதைய பிசி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன்’ ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்றது. வசூலிலும் ‘அமரன்’ வேறலெவல் வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தரமான லைன் அப்களை கையில் வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். ‘சூரரைப் போற்று’ படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பினை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கரா, சூர்யா காம்போவில் ‘புறநானூறு’ என்ற படம் உருவாக இருந்தது.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி.. முடிவுக்கு வந்த 29 வருட திருமண வாழ்க்கை!

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

ஆனால் ஒருசில காரணங்களால் சூர்யா இப்படத்தில் இருந்து விலகி விட்டார். இதனையடுத்து சிவகார்த்திகேனை வைத்து இந்த படத்தை இயக்கவிருக்கிறார் சுதா கொங்கரா. இந்த காம்போ கோலிவுட் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இப்படத்தில் வில்லன் ரோல் வெயிட்டானது என்பதால், அந்த கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து முடிவு செய்துள்ளார் சுதா கொங்கரா.

இந்நிலையில் இப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வலைப்பேச்சு அந்தணன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். சமீப காலமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. இவரது கைவசம் ஜீனி, காதலிக்க நேரமில்லை, கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் படங்கள் உள்ளன. இப்படியான சூழ்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயரம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sk-வை வாழ்த்தி தள்ளிய சீமான்

மேலும், இப்படத்தில் நடிக்க விஷாலிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ‘எஸ்கே 25’ படமாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள இதில் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். மேலும், இது ஜிவி பிரகாஷின் 100-வதாக இசையமைக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply