விமர்சனம்: நிறங்கள் மூன்று!

0

சில வருடங்களுக்கு முன்பு துருவங்கள் பதினாறு என்ற வித்தியாசமான த்ரில்லர் படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த கார்த்திக் நரேன் தற்சமயம் ‘நிறங்கள் மூன்று’ என்ற படத்தை இயக்கி உள்ளார். சரத்குமார், அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

அடையாறில் உள்ள இளைஞர் வெற்றி சினிமாவில் டைரக்டராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் சினிமா கம்பெனிகளுக்கு படை எடுத்து வருகிறார். தம்பி வெற்றிக்கு போதை பழக்கம் வேறு இருக்கிறது. (இதை போட்டால் தான் கற்பனை கட்டுக்கடங்காமல் வரும் என்ற விளக்கம் வேறு) ஒரு பிரபல டைரக்டரிடம் கதை சொல்ல, அந்த கதையை திருடி விடுகிறார் டைரக்டர். இந்த வெறுப்பிலும், கோபத்திலும் இன்னும் அதிக அளவில் போதை மருந்துகள் உட்கொள்கிறார் இளைஞர்.

Share.

Leave a Reply