Remake Movies : பொதுவாக ஒரு திரைப்படத்தை பிற மொழிகளில் ரீமிக்ஸ் செய்யும் வழக்கத்தை நாம் பார்த்திருப்போம் ஆனால் தெலுங்கு மொழியில் வெளியான ஒரு படம் சுமார் 40 ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழ் மொழியை போலவே தெலுங்கு மொழி திரைப்படங்களும் உலக அரங்கில் பெரும் வரவேற்பை தொடர்ச்சியாக பெற்று வருகிறது 100 ஆண்டுகளைக் கடந்து தமிழ் சினிமா பயணித்து வருவதைப் போல தெலுங்கு சினிமாவும் 100 ஆண்டுகளை கடந்து பயணித்து வரும் ஒரு மிகச்சிறந்த திரையுலகமாகும் இந்நிலையில் கடந்த 1942 ஆம் ஆண்டு சி பிள்ளையா என்பவருடைய இயக்கத்தில் கவி என்பவருடைய எழுத்தில் கோவையை சேர்ந்த எஸ் எஸ் வாசனை தயாரிப்பில் நடிகை காஞ்சனா மற்றும் நடிகர் சுபா ராவ் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பால நாகம்மா சாபத்திற்கு உள்ளான ஒரு இளவரசியின் கதை தான் இது.