Suriya: சூர்யாவுக்கு எதிராக இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் வேலை செய்கின்றார்கள்.. தனஞ்செயன் ஓபன்!

0

சென்னை: கங்குவா படத்தின் தோல்விக்குப் பின்னர், ஸ்டூடியோ க்ரீன் தனஞ்செயன் கடும் அப்செட்டுக்கு ஆளாகியுள்ளார் என்றுதான் கூறவேண்டும்போல. எக்ஸ் தளத்தில் இணையவாசிகளுடன் சண்டைக் செல்வது தொடங்கி, சமீபத்தில் அவரது பேட்டி வரை தனஞ்செயன் நடவடிக்கைகள் அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அதேநேரத்தில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ள கருத்துக்களை சாதாரணமாகவும் கடந்துவிட முடியாது. தமிழ் சினிமா உலகில் நன்கு அடையாளம் பெற்றுள்ளவராக இருக்கும்தனஞ்செயன் , சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யாவுக்கு எதிராக இரண்டு ரசிகர்களின் ரசிகர்களும், இரண்டு கட்சியினரும், தீவிரமாக வேலை செய்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கங்குவா. இந்தப் படத்தினை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பெரும் பொருட் செலவில் தயாரித்தார். படத்தினை சிறுத்தை சிவா இயக்கினார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் செம அப்செட் ஆகவே, படம் வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தது.

இதற்கு காரணம் படத்தின் திரைக்கதை மற்றும் பின்னணி இசை என பெரும்பான்மையான ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. இதனால் படக்குழு தரப்பில் இருந்து, படத்தின் நீளத்தை 12 நிமிடங்கள் குறைத்தனர். இதுமட்டும் இல்லாமல், படத்தின் ஒலி அளவினை அனைத்து திரையரங்கிலும் 2 பாய்ண்ட்கள் குறைத்து வைக்கவும் சொன்னார்கள். ஆனால் இது போன்ற நடவடிக்கைகளை படக்குழு எடுப்பதற்கு முன்னரே படம் குறித்த நெகடிவ் விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.

தனஞ்செயன் : இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் தனஞ்செயன் அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது அந்தப் பேட்டியில், ” சூர்யாவை டார்கெட் செய்கின்றார்கள். டார்கெட் என்றால், நான் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் கூறியிருந்தேன். அதில் சூர்யாவுக்கு எதிராக இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்கள் திட்டம்போட்டு வேலை செய்கின்றார்கள். சூர்யா அடுத்த லெவலுக்கு முன்னேறிவிடக்கூடாது என அவர்கள் இப்படிச் செய்தார்கள். இப்படியான பொதுக்கருத்தும் அப்போது இருந்தது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

வளரக்கூடாது: இன்றைய காலகட்டத்தில் அந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுடன் சேர்ந்து, இரண்டு அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டனர். அதற்கு காரணம், சூர்யா சாரின் கடந்த இரண்டு படங்களில் அவர் கூறிய கருத்துகள், அவர் பேசியது விஷயங்களால் இவ்வாறு செய்கின்றார்கள். இப்படியான நிலையில், ஏற்கனவே இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் இரண்டு கட்சியினர் சேர்ந்து கொண்டு, சூர்யா சார் அடுத்த லெவலுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக உழைக்கின்றார்களோ என்கின்ற கேள்வி இருக்கின்றது.

சூர்யாவின் கருத்து: ஒரு நடிகரின் இடத்தினை மற்றொரு நடிகரால் அசைத்துக் கூட பார்க்க முடியாது. இப்படியான நிலையில், நான் பொதுவாக எதாவது ஒரு பதிவினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டாலும்கூட, குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள்தான் அதனை ட்ரோல் செய்து கொண்டு இருக்கின்றார்கள். எதற்காக இவ்வளவு வன்மத்துடன் இருக்கின்றார்கள் எனத் தெரியவில்லை. அதேபோல், சூர்யா சார் அவருடைய கருத்தினை நீட் தொடர்பாகவோ, புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவோ எதாவது பேசினால், அது அவருடைய கருத்துரிமை. இதற்காகவும் அரசியல் கட்சியினர் சூர்யாவை டார்கெட் செய்கின்றனர்” எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

Share.

Leave a Reply