“நானும் விஜய் ரசிகன் தான்” ஆனா அரசியல் என்பது வேறு – போஸ் வெங்கட் அதிரடி!

0

Director Bose Venkat : இயக்குனர் மற்றும் நடிகர் போஸ் வெங்கட், தான் நடிகர் விஜய்க்கு எப்போதுமே ரசிகன் என்று கூறி சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கோலிவுட் திரை உலகை பொறுத்தவரை சுமார் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாகவே விரைவில் அவர் அரசியல்களில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் அது உறுதி செய்யப்பட்டது. தளபதி விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் கொடியும் பாடலும் வெளியான நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள ஒரு இடத்தில் தளபதி விஜயின் அரசியல் கட்சியினுடைய முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

Share.

Leave a Reply