சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்மையில் ‘கங்குவா’ வெளியானத்தை தொடர்ந்து, அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இப்படத்தின் ஷுட்டிங் தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சூர்யா 45’ படத்தின் ஷுட்டிங் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் பூஜையுடன் ஆரம்பித்துள்ளது.
கங்குவா
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ ரிலீஸ் ஆனது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. ரிலீசான முதல் நாளே ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளான காரணத்தால், ‘கங்குவா’ எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இந்நிலையில் சூர்யா தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
சூர்யா 45
சூர்யா தனது 45 வது படத்தினை இயக்கும் வாய்ப்பினை ஆர்.ஜே. பாலாஜி கைப்பற்றியுள்ளார். எதிர்பார்க்காத இந்த கூட்டணி இணைந்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள ‘சூர்யா 45’ படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
மாசாணி அம்மன்
இந்நிலையில் ‘சூர்யா 45’ படத்தின் பூஜை பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் நடந்துள்ளது. இதில் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பூஜையில் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து நாளை முதல் கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ‘சூர்யா 45’ ஆன்மீகம் சம்பந்தமான படமாக உருவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மாசாணி அம்மன் கோயிலில் பூஜை நடந்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி
இப்படத்தின் கதை வேலைகளுக்காக 15 மாதங்கள் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தின் கதையை கேட்டதுமே சூர்யா ஒகே சொல்லி விட்டாராம். நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா ஒரு கதையை கேட்டதும் ஓகே சொன்னது இப்படத்திற்கு தானாம். இந்த தகவலை ஆர்.ஜே. பாலாஜியே சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரிஷா
‘சூர்யா 45’ படத்தில் கதாநாயாகியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இணைந்து நடித்த மெளனம் பேசியதே, ஆறு படங்கள் ஹிட்டடித்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த காம்போ ஹாட்ரிக் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளதுள்ளார்.