சென்னை: ஒருவர் பிரபலமாக மாறிவிட்டால் அவர் குறித்து செய்திகளை தெரிந்து கொள்ள மக்கள் மத்தியில் எப்போதும் ஆர்வம் இருந்து கொண்டே உள்ளது. அதிலும் பிரபலங்கள் புதிதாக வீடு வாங்குவது நகை வாங்கவது கார் வாங்குவது காதலில் இருப்பது காதல் முடிவு திருமணம் விவாகரத்து புதிதாக தொழில் தொடங்குவது என பிரபலங்களைச் சுற்றி எது இருந்தாலும் அதை குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு இப்போது ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்களுக்கு விவாகரத்து ஆண்டு என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு இந்த ஆண்டு பிரபலங்களிடையே விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் பிரபலங்களின் விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தனுஷ் ஐஸ்வர்யா, ஜி வி பிரகாஷ் சைந்தவி, ஜெயம் ரவி ஆர்த்தி, ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு ஆகியோர் தங்களது திருமண உறவில் இருந்து வெளியேறி உள்ளனர். இதில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராய் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்தை உறுதி செய்துள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து விவகாரம் தொடர்பாக சென்னை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதற்கு முன்னர் வரை அதாவது தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் வரை இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் வேகமாக பரவியது. குறிப்பாக இவர்களது விவாகரத்து விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக இருவரையும் அமர வைத்து பேசி மீண்டும் இணைந்து வாழ கூறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் குடும்ப நல நீதிமன்றம் இவர்களது விவாகரத்தை உறுதி செய்வது பலருக்கும் அதிர்ச்சியை ஊட்டியது.
ஜெயம் ரவி: இவர்களுடைய விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது என்றால் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவரது மனைவியும் பாடகியுமான சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். சைந்தவியும் அதேபோல் அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது. இவர்களது விவாகரத்து குறித்த தகவல்கள் கொஞ்சம் அடங்கிய போது நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இது இன்னும் ரசிகர்களை அப்செட் மனநிலைக்கு தள்ளியது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
அதிர்ச்சி: இப்படியான நிலைகள் தான் இசை புயல் ஏ ஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்தார். சாய்ரா பானுவும் ஏ ஆர் ரகுமான் பிரிவதாக அறிவித்தார். இதற்கிடையில் ஏ ஆர் ரகுமான் மீது பல்வேறு அவதூறுகளை பலர் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பினர். தன் மீதான அவதூறுகள் தொடர்பான செய்திகள் வீடியோக்கள் சமூக வலைதள பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் பிறப்பித்தார். உடனே ரகுமான் மீது அவதூறு பரப்பும் செய்திகள் சமூகவலை பதிவுகள் வீடியோக்கள் நீக்கப்பட்டன.
சினேகா – பிரசன்னா: இப்படி இந்த ஆண்டு முழுவதுமே பிரபலங்களின் வெற்றி தோல்விகளை கடந்து விவாகரத்து தொடர்பாகவே மிகவும் பரபரப்பாக சென்று விட்டதால் இந்த ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் எளிதில்மறந்து விட மாட்டார்கள். தமிழ் திரை உலகில் மிகவும் க்யூட்டான ஜோடிகளை ஒரு ஜோடி தான் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது சினேகா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சினேகாலயா என்ற ஆடை வடிவமைப்பு மற்றும் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.
பளீச் பதில்: அதில் வரும் மார்கழி மாதம் பல்வேறு சபாக்களில் பாடுவதற்கு பாடகிகள் விதவிதமாக அதே நேரத்தில் புதிய டிசைன்களில் அணியும் வகையிலும் புடவைகளை தயாரித்துள்ளனர். இது தொடர்பான வெளியீட்டு மற்றும் அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இப்படியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சினேகா மற்றும் பிரசன்னாவிடம் பிரபலங்களின் விவாகரத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு உடனே சினேகா, ” இப்போது நாம் ஒரு நல்ல விஷயத்தில் இருக்கின்றோம். இந்த இடத்தில் அது பற்றிய பேச வேண்டாமே” என பதில் அளித்தார். இவரது இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.