2024ல் மிகவும் பிரபலமான டாப் 10 ஸ்டார்கள் பட்டியல்: விஜய், அஜித் பெயர்…

0

ஐ.எம்.டி.பி. வெளியிட்டிருக்கும் டாப் 10 இந்திய ஸ்டார்களின் பட்டியலை பார்த்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2024ம் ஆண்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் டாப் 10 இந்திய ஸ்டார்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

த்ரிப்தி டிம்ரி

2024ம் ஆண்டு கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் டாப் 10 ஸ்டார்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது IMDB. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாலிவுட் நடிகையான த்ரிப்தி டிம்ரி. அனிமல் படம் மூலம் ஏகத்திற்கும் பிரபலமான அவர் தான் இந்தியாவின் பிரபலமான ஸ்டார் ஆவார். தனக்கு இப்படி ஒரு கவுரவம் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் த்ரிப்தி டிம்ரி.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

தீபிகா படுகோன்

பாலிவுட்டின் வெற்றிகரமான நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனுக்கு ஐ.எம்.டி.பி. பட்டியலில் இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தைக்கு தாயானார். மகளுக்கு துஆ படுகோன் சிங் என பெயர் வைத்துள்ளனர். இந்த ஆண்டு தீபிகா நடிப்பில் வெளியான கல்கி, ஃபைட்டர், சிங்கம் அகைன் ஆகிய மூன்று படங்களும் ஹிட்டாகின.

ஷாருக்கான்

ஐ.எம்.டி.பி. பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார் பாலிவுட் நடிகரான இஷான் கட்டார். நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி. அவருக்கு அடுத்த இடம் தான் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு கிடைத்திருக்கிறது. ஐ.எம்.டி.பி. பட்டியலில் ஷாருக்கானுக்கு முதலிடம் கிடைக்கும் என நினைத்த ரசிகர்கள் 4வது இடத்தில் அவரின் பெயரை பார்த்து அப்படியே ஷாக் ஆகிவிட்டார்கள்.

சோபிதா துலிபாலா

ஷாருக்கானுக்கு அடுத்த இடத்தில் அதாவது 5வது இடத்தில் இருக்கிறார் சோபிதா துலிபாலா. அவருக்கும், நாக சைதன்யாவுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் நடந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

விடாமுயற்சி

விடாமுயற்சி படத்தக்கு திடீர் சிக்கல்

ஐஸ்வர்யா ராய்

ஐ.எம்.டி.பி. பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார் பாலிவுட் நடிகை ஷர்வாரி. ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு 7வது இடம் தான் கிடைத்திருக்கிறது. சமந்தாவுக்கு 8வது இடமும், ஆலியா பட்டுக்கு 9வது இடமும், பிரபாஸுக்கு 10வது இடமும் கிடைத்திருக்கிறது. அதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களோ எங்க விஜய், அஜித் குமார், ரஜினி, சூர்யாலாம் எங்கய்யா என கேட்டிருக்கிறார்கள்.

Share.

Leave a Reply