Year Ender 2024: விஜய் த்ரிஷா லிஃப்ட் முதல் தனுஷ் நயன்தாரா சண்டை வரை.. டாப் 5 ஷாக் மேட்டர்கள்!

0

சென்னை: ஒரு வருடம் பிறக்கும் போது திரைத்துறையில் இருப்பவர்கள், அந்த புது ஆண்டில் ஏற்கனவே கொடுத்த வெற்றிப் படங்களைவிட, புது ஆண்டில் நல்ல நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். அந்த புதுப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெறவேண்டும் என நினைப்பார்கள். அதேநேரத்தில் சர்ச்சைகள் எதிலும் மாட்டிக் கொள்ளக்கூடாது எனவும் நினைப்பார்கள்.

ஆனாலும் சினிமாவைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் எதாவது சர்ச்சையில் மாட்டிக் கொள்கின்றனர். அந்தவகையில், இந்த 2024ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பிரபலங்களின் நடவடிக்கை குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

1. விஜய் – த்ரிஷா லிஃப்ட் செல்ஃபி: விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒரு லிஃப்ட்டில் இருக்கும்போது எடுத்துக் கொண்ட செல்ஃபியை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த செல்ஃபி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளபியது. குறிப்பாக நடிகர் விஜய் புதிதாக வாங்கியுள்ள அலுவலத்தின் கட்டிடம் இருக்கும் அப்பார்ட்மெண்டில் த்ரிஷா தனக்கு வீடு வாங்கியுள்ளதாக பலரும் கூறினார். மேலும் இந்த லிஃப்ட் செல்ஃபிவை வைத்து மிகவும் அவதூறாகவும் பலர் விமர்சனம் செய்தனர். இவற்றிக்கு எல்லாம் விஜய், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் மறைமுகமாக பதிலடி கொடுத்தார். அதன் பின்னரே இந்த விவகாரம் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தது.

2. கார் ரேஸ் டீம் தொடங்கிய அஜித்: நடிகர் அஜித்க்கு கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் அடுத்த ஆண்டு நடிகர் அஜித்குமார் மற்றும் அவர் உருவாக்கியுள்ள கார் ரேஸ் அணி ஐரோப்பிய கார் பந்தையத்தில் கலந்துகொள்ளவுள்ளது. இதற்காக அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மேலும், தனது உடல் எடையையும் குறைத்து வருகின்றார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

3. தனுஷ் – நயன்தாரா சண்டை: நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கு முன்னர், நயன்தாரா தரப்பில் இருந்து தனுஷ்க்கு எழுதப்பட்ட கடிதம் பலரது கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல் பெரும் விவாதப்பொருளாக மாறியது. குறிப்பாக தனது திருமணத்தை ஒட்டி நயன்தாரா தரப்பில் உருவாக்கப்பட்ட ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்களைப் பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை எனவும், இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நயன்தாராவும் தனுஷ்ஷும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் திரும்பி அமர்ந்திருந்த புகைப்படங்களும் வைரலானது.

4. பாதுகாவலர்களை தட்டிக்கேட்காத தனுஷ்: தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குபேரா. நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக, நாகர்ஜுனா, தனுஷ் ஆகியோர் மும்பைக்குச் சென்றனர். அப்போது நாகர்ஜுனாவை நோக்கி ஒரு வயதான ரசிகர் வரவே, அவரை நாகர்ஜுனாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். இதனை பின்னால் வந்து கொண்டு இருந்த தனுஷ் பார்த்துக் கொண்டு அமைதியாகவே இருந்துவிட்டார். இதனைப் பார்த்த பலரும் தனுஷ்ஷின் நடவடிக்கையை காட்டமாக விமர்சித்தனர். இது தொடர்பாக நாகர்ஜுனா ட்வீட் போட்ட பின்னரும், அந்த வயதான ரசிகரை நேரில் சந்தித்த பின்னரும்தான் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.

5. சலார், வேட்டையன் படம் பார்த்த விஜய்: கோட் படத்தின் படப்பிடிப்புக்கு மத்தியில் நடிகர் விஜய், பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தின் முதல் பாகத்தினைப் பார்த்தார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது. நடிகர் விஜய் அவ்வப்போது தனது பிரபல வாழ்க்கையினைத் துறந்துவிட்டு, சாதாரண மக்களோடு மக்களாக இருக்க ஆசைப்படுவார். அந்த வகையில் ஹைதராபாத்தில் சலார் படமும் சென்னை தேவி தியேட்டரில் வேட்டையன் படமும் பார்த்தார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.

Share.

Leave a Reply