சூரியின் ‘விடுதலை 2’ படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி!

0

கோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல்ஹாசன், சூர்யா, போன்ற சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே தமிழக அரசின் அனுமதியோடு சிறப்பு காட்சி வெளியிடப்படுகிறது. ஆனால் தற்போது காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறி உள்ள, நடிகர் சூரியின் திரைப்படத்திற்கும் உரிய அரசு அனுமதியோடு சிறப்பு காட்சி வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அரசு தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த நடிகர் சூரி, அடுத்தடுத்து பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். காமெடியனாக நடித்தபோது ஒரு படத்திற்கு சில லட்சங்கள் மட்டுமே சம்பளமாக பெற்ற சூரி, தற்போது 10 கோடி முதல் 15 கோடி வரை சம்பளமாக பெறும் ஹீரோவாக மாறியுள்ளார்.

சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். முதல் பாகத்தில் விஜய் சேதுபதி ஒரு போராளி என்பதை மட்டுமே வெளிப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.

சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகும் கதாநாயகன்! யாரும் எதிர்பாராத காரணம்?

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

‘விடுதலை 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியான போதே, ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மீதான ஆர்வம் அதிகரித்தது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்ப்பின் காரணமாகவே தற்போது, அரசு அனுமதியோடு நாளை ஒரு நாள் மட்டும் இரவு 9 மணி முதல் இரவு 2 மணி வரை சிறப்பு காட்சிகளை திரையரங்குகள் ஒளிபரப்ப அரசு தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மாலை அணிந்து சபரிமலைக்கு சென்ற சசிகுமார்; வைரலாகும் போட்டோஸ்!

இளையராஜா இசையமைத்துள்ள ‘விடுதலை 2’ திரைப்படத்தை, ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் கிராஸ் ரூட் ஃபிரம் கம்பெனி தயாரித்துள்ளது. மேலும் ரெட் ஜெயின் மூவிஸ் இந்த படத்தை விநியோகம் செய்துள்ளது. ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, ஆர் ராமர் படத்தொகுப்பு செய்துள்ளார். பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப், கௌதம் வாசுதேவ் மேனன். பவானி ஸ்ரீ, அட்டகத்தி தினேஷ், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், ரவி மரியா, பிரகாஷ்ராஜ், இளவரசு, பாலாஜி சக்திவேல், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply