Lokesh Kanagaraj releases the trailer of the film ‘Ten Hours’ | ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் டிரெய்லரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்

0

சிபி சத்யராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் டிரெய்லர் நாளை காலை வெளியாக உள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான ‘வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் தற்போது ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்கு “டென் ஹவர்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கே.எஸ் சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணியளவில் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளார். இது குறித்த பதிவை நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

Share.

Leave a Reply