சென்னை: நடிகர் விஜய்யின் இறுதிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் சூட்டிங் கடந்த மாதம் பிரம்மாண்டமான பூஜையுடன் சென்னையில் துவங்கப்பட்டது. இதையடுத்து முதல் கட்ட ஷூட்டிங்காக பாடல் காட்சியின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் 2வது கட்ட சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரின் காம்பினேஷன் காட்சிகளை எடுக்க இயக்குனர் ஹெச் வினோத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தளபதி 69 படம் கடந்த மாதம் 5ம் தேதி பூஜையுடன் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு, முதல் கட்டமாக பாடல் காட்சியின் சூட்டிங்கை இயக்குனர் ஹெச் வினோத் எடுத்து முடித்துள்ளார். அரசியல் கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிகச் சிறப்பாக அமைந்தது.
தளபதி 69 படம்: இதையடுத்து தற்போது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 69 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்றைய தினம் இந்த படத்தின் 2வது கட்ட சூட்டிங் சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரின் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பூஜா ஹெக்டே விமான மூலம் சென்னை வந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கிய சூட்டிலேயே கல்லா கட்ட துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை 75 கோடி ரூபாய்களுக்கு கை மாறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
விற்றுத் தீர்ந்தது வெளிநாட்டு உரிமை: முன்னதாக விஜய்யின் படங்களை வெளிநாடுகளில் வெளியிட்ட துபாயை சேர்ந்த பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தளபதி 69 படத்தின் வெளிநாட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் இந்த வெளிநாட்டு உரிமையை சில கண்டிஷன்களுடன் பார்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளதாக தெரிகிறது. இந்த தொகையை ஒரே செக்காக கொடுக்க வேண்டும் என்ற கண்டிஷனே அது. பார்ஸ் நிறுவனமும் இதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிகிறது.
ஆச்சர்யத்தில் கோலிவுட்: முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும் எப்போதுமே ஒரு படத்தின் ஷூட்டிங் துவங்கி, பாதி படத்தின் சூட்டின் நிறைவடைந்த பின்பு தான் அந்த படத்தின் வெளிநாட்டு, டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் விற்பனையாகும். இதுவே காலங்காலமாக இருந்து வரும் நடைமுறையாக உள்ளது. ஆனால் விஜய் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் ஒவ்வொரு படத்திற்கும் 200 கோடி ரூபாய்களுக்கு மேல் சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அவற்றை வேண்டாம் என்று சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் குதிப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறது. அதேபோல, தற்போது அவரது தளபதி 69 படத்தின் வசூலும் துவங்கியுள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.