சென்னை: தமிழ் சினிமாவின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் பெறுபவர்கள் பல லட்சக்கணக்கானோர் உள்ளனர். இதில் சினிமா விமர்சகர்கள் சொற்ப அளவில் இருந்தாலும் அவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஏற்படும் தாக்கம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமா விமர்சகர்களில் தனக்கென தனிபாணியில் ஒருபடத்தினை விமர்சிக்கும் விமர்சகராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் தீபாவளிக்கு வெளியான அமரன் படத்தினை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சிவகார்த்திகேயனை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இப்படியான நிலையில் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனின் செயலைக் கண்டித்துள்ளார்.
விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பொதுவாகவே ஒரு படத்தினை விமர்சிக்கும்போது தனது விமர்சனங்களில் மிகவும் கடுமையான வார்த்தைகளை நக்கல் நையாண்டித்தனமாக விமர்சனம் செய்வார். இவர் இவ்வாறு விமர்சனம் செய்யும் விதம் பலரையும் கவர்ந்ததால், இவரது விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் முக்கியமானதாக மாறியது. அதாவது ப்ளூ சட்டை மாறன் ஒரு படத்தினைப் பாராட்டிவிட்டால் அந்தப் படத்தினைப் போய் பார்க்கலாம் எனவும், அவர் படத்தினை திட்டிவிட்டால் படத்திற்கு போவதே பண விரையம் என ரசிகர்கள் மனதில் எண்ணம் தோன்றும் அளவிற்கு இன்ஃபுளூயன்சராக மாறிவிட்டார் என்றே கூறவேண்டும்.
இப்படியான நிலையில் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகவே, இவரது விமர்சனங்கள் விமர்சனங்களைக் கடந்து தனி மனித தாக்குதலாக மாறுகின்றது என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகவும் மோசமாக தனி மனித தாக்குதல் நடத்தி வருகின்றார் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். அண்மையில் வெளியான வேட்டையன் படத்தின் விமர்சனத்தின்போதும் மிகவும் மோசமாக தனி மனித தாக்குதல் நடத்தியிருந்தார்.
அமரன்: இப்படியான நிலையில், தீபாவளிக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் விமர்சன வீடியோவில், படத்தின் விமர்சனத்தை முடித்துவிட்டு, யாரோ ஒரு இணையவாசி கமெண்ட் செய்தார் எனவும் அதனை நினைவு கூறுகின்றேன் எனவும் ப்ளூ சட்டை மாறன் பேசியிருந்தார். அது சிவகார்த்திகேயனை மிகவும் அவதூறாக விமர்சிப்பதாக இருந்தது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
பிரபலம்: இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகத்தான் இருந்தது. இவரது இந்த விமர்சனத்தினைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனைக் கடுமையான விமர்சித்தனர். இன்னும் சொல்லப்போனால் ப்ளூ சட்டை மாறனை மிகவும் மோசமான சொற்களால் வசை பாடினர். யாரோ ஒரு இணையவாசி இவ்வாறு நடந்து கொள்வதை தவறில்லை என, எப்படி கூற முடியாதோ, அதேபோல் மக்கள் வெளிச்சம் உள்ள ப்ளூ சட்டை மாறன் போன்ற பிரபலம் இவ்வாறு பேசுவதையும் சரி எனக் கூறமுடியாது.
கலையரசன்: ப்ளூ சட்டை மாறனின் இந்த பேச்சுக்கு நடிகர் கலையரசன் தனது எக்ஸ் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறனை கண்டித்து பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும் அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை! முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவருப்பாக தனிமனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது!” என பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.