Amaran Official Box Office: முதல் நாளே அடித்துத் தூக்கிய அமரன்.. தவிடுபொடியான பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்

0

சென்னை: சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடித்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நேற்று அதாவது 2024ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான படம் அமரன். இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய தினத்தில் இருந்தே தெரிவித்தனர். படம் நேற்று வெளியானது. இந்நிலையில் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கூறியதைப்போல் அமரன் படம் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால், பெரும்பாலான படப்பிடிப்புகள் இந்திய ராணுவத் தளவாடங்களிலேயே நடைபெற்றது. படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் தீபாவளி ரிலீஸில் இந்தப் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்தது. மேலும், படம் இந்தியாவைக் கடந்தும் வெளிநாடுகளிலும் நல்ல எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

படத்தினை முதல் நாளே பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படக்குழுவினரைப் பாராட்டினர். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு போன் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “க்ளைமேக்ஸ் காட்சி மிகவும் எமோஷனலா இருக்கு, கண்ணு கலங்கிடுச்சு” எனக் கூறினார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

பாராட்டு: படம் பார்த்த பலரும் படகுழுவினரைப் பாராட்டினர். குறிப்பாக நடிகை சாய் பல்லவியின் நடிப்பினையும் ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையும் பாராட்டி வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பல திரையரங்கங்களில் அனைத்துக் காட்சிகளுக்கும் டிக்கெட் முன்பதிவு கிட்டத்தட்ட 99 சதவீதம் நிரம்பிவிட்டது. இதனால் படம் இந்த வார இறுதிக்குள் அசால்ட்டாக சில நூறு கோடிகளை அள்ளும் எனவும் பேசப்படுகின்றது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

வசூல்: புக் மை ஷோ தளத்தில் இந்த ஆண்டு அதிக டிக்கெட்டுகள் ப்ரீ புக்கிங்கில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்தது. இந்நிலையில் படம் தமிழ்நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளுக்கு மேலும், இந்தியா முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளுக்கு மேலும் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதில், படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகள் வசூல் செய்ததாக அறிவித்துள்ளது.

சாதனை: இந்தத் தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் படங்களிலேயே முதல் நாள் வசூலில் அதிக வசூல் செய்த படம் அமரன் என்ற சாதனையையும் அமரன் படம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தத் தகவல் இணையத்தில் மட்டும் இல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் வேகமாக பரவி வருகின்றது.

Share.

Leave a Reply