சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது அமரன் படம். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. இதையடுத்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் லோகேஷ் கனகராஜ், சிம்பு, எஸ்ஜே சூர்யா, சூர்யா, ஜோதிகா என முன்னணி கோலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் அமரன் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
அமரன் படம்: ரிலீசாகி ஒரு வார காலம் ஆனநிலையிலும் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அரங்கு கொள்ளாத காட்சிகளாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் வசூல் கடந்த ஆறு நாட்களில் 163 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் அந்த கேரக்டர்களாகவே மாறி ரசிகர்களை வெகுவாக இம்ப்ரஸ் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: அமரன் படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் திரையரங்குகளை வியாபித்து வருகிறது. தீபாவளிக்கு அமரன் படத்துடன் வெளியான மற்ற படங்கள் சரியான கவனத்தை பெறாத நிலையில் அமரன் படத்துடன் போட்டி போட்டுக் கொண்டு துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படம் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அமரன் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். லக்கி பாஸ்கர் படத்திற்கும் அவர்தான் இசை. தீபாவளிக்கு ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான இரண்டு படங்களும் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்துள்ளதில் அவர் மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களும் ஹேப்பி.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
அமரன் டீமை பாராட்டிய அனிருத்: இந்நிலையில் இந்த படத்திற்கு ஒவ்வொரு நாளும் வாழ்த்து மழைகளை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரை பிரபலங்களும் பொழிந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, சூர்யா, ஜோதிகா, சிவக்குமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் படத்தை பார்த்து வாழ்த்தியுள்ளனர். இதனிடையே, இன்றைய தினம் பிரபல இசையமைப்பாளர் அனிருத் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோருக்கும் அனிருத் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
ட்வீட் போட்டா படம் ஹிட்டாகனும்ங்கறது இப்போ பிரஷர் ஆயிடுச்சு.. என்ன அனிருத் நிலைமை இப்படி ஆயிடுச்சு?
ஜிவி பிரகாஷை பாராட்டாத அனிருத்: சினிமாவின் பெஸ்ட் வடிவமாக அமரன் படம் வெளியாகியுள்ளதாகவும் சிவகார்த்திகேயனை நினைத்து பெருமை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று பொத்தாம் பொதுவாக அவர் தெரிவித்துள்ளார். அமரன் படத்தின் மிகவும் நெகிழ்ச்சியான காட்சிகளையும் ரசிகர்களிடம் மிகச் சிறப்பாக தன்னுடைய இசை மூலம் கொண்டு சென்றுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் அவரது இசையும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தனியாக அனிருத் குறிப்பிட்டு வாழ்த்துக்களை கூறவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.