கோவா: நடிகை கீர்த்தி சுரேஷ், தனது காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த 12ஆம் தேதி கோவாவில் இந்து முறைப்படியும், கிருஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் கோலிவுட் பிரபலங்கள் தொடங்கி, தென்னிந்திய பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள் என இந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். ஏற்கனவே இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து தனியார் விமானத்தில் சென்றது சர்சையாக மாறியது. இப்படியான நிலையில், இயக்குநர் அட்லீ திருமணத்தில் கலந்து கொண்டது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் அட்லீ, பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, அதன் பின்னர் சினிமாவில் இயக்குநராக கால் பதித்தவர். தமிழ் சினிமாவில் நான்கு படங்களை இயக்கி, நான்கு படங்களையும் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றிப் படமாக மாற்றிக் காட்டியவர் அட்லீ. இதனாலே இவரை ரசிகர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என அழைப்பதுண்டு. தனது முதல் படமான ராஜா ராணி தொடங்கி, விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராக மாறினார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள், அட்லீயின் திரை வாழ்க்கையில் மட்டும் இல்லாமல், விஜய்யின் திரை வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கியது.
அட்லீ: பிகில் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர், அட்லீ பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தினை இயக்கினார். அந்தப் படத்தின் வசூல் மற்றும் வெற்றி, பாலிவுட்டில் அட்லீயை உச்ச இயக்குநராக மாற்றியது. இப்படியான நிலையில், தனது தெறி படத்தினை பாலிவுட்டில், பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்ய, ஒப்புதல் வழங்கியது மட்டும் இல்லாமல், படத்தினை தயாரிக்கவும் செய்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
திருமணக் கொண்டாட்டம்: இதனால் கீர்த்தி சுரேஷ்ஷின் திருமணத்திற்கு தனது மனைவி, ப்ரியா அட்லீயுடன் சென்றிருந்தார் அட்லீ. திருமணத்தில் மணமக்களை வாழ்த்தியது மட்டும் இல்லாமல், திருமணத்தில் நடபெற்ற, கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டார். அட்லீயும் ப்ரியா அட்லீயும் திருமணக் கொண்டாட்டத்தின் மத்தியில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த செல்ஃபியில் அட்லீ, அட்லீ மனைவி ப்ரியா அட்லீ, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் மற்றொரு பெண் உள்ளார். அட்லீ நடிகைகளுடன் எடுத்த புகைப்படத்தைப் பார்த்த இணையவாசிகள் கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகின்றனர்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
கொலை: அதேபோல் கொண்டாட்டத்திற்கு மத்தியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றில், அட்லீ, ப்ரியா அட்லீ, கலியாணி பிரியதர்ஷன், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி மற்றும் வேறு இரண்டு பெண்களும் உள்ளனர். இந்தப் புகைப்படங்களை நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டிலை டேக் செய்து, ” உங்கள் திருமணமானது உங்கள் உறவைப் போலவே அழகாக இருந்தது, எனக்கு உங்கள் இருவரையுமே மிகவும் பிடிக்கும். நீங்கள் திருமணம் செய்து கொண்டதை நினைத்து நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் 🥹 திருமணத்தில் நீங்கள் இருவரும் மிகவும் அழகாக இருந்தீர்கள். நான் அழும் படங்களை எப்போதாவது வெளியிட்டால், நான் உங்களைக் கொலை செய்வேன் ♥️” என பதிவிட்டுள்ளார். இதுவும் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.