தந்தையின் சொத்தில் தனது பங்கை ஆதவற்றோர் இல்லங்களுக்கு எழுதி வைத்தாரா?
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் சிவராஜ்குமார். இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும், புனீத் ராஜ்குமாரின் சகோதரரும் கூட. சமீப காலமாக ஜெயிலர், கேப்டன் மில்லர் என தமிழ் திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளார். தொடர்ச்சியாக தமிழ் படங்களை கமிட் செய்தும் வந்தார்.
அண்மையில் சிவராஜ்குமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அவர் வெளியிட்ட தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் விரைந்து நலமடைய வேண்டும் என வாழ்த்துகளும் குவிந்தன.
பரவும் தகவல்
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
இந்த நிலையில் சிவராஜ்குமாரின் உடல்நிலை தொடர்பாக சில தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. குருவியார் (@Kuruviyaaroffl) என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட நியூஸ் கார்டில், “கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் புற்றுநோயால் மருத்துவமனையில் சேர்ப்பு. தனக்கு சேர வேண்டிய தனது தந்தை சொத்துக்கள் அனைத்தையும் அனாதை ஆசிரமங்களுக்கு எழுதி வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை ஷேர் செய்து பலரும் சிவராஜ்குமார் விரைவில் நலம்பெற்று வர வேண்டும் என கமெண்ட் செய்து வந்தனர்.
உண்மை சரிபார்ப்பு
இதன் உண்மைத் தன்மை குறித்து அறிய நமது குழு ஆய்வில் இறங்கியது. அந்த கார்டில் சினிமாபுரம் என சேனல் வெளியிட்டதாக இருந்தது. வெளியிட்ட தேதி, நேரம் குறித்த எந்த தகவலும் இல்லை. சினிமாபுரம் என்ற வார்த்தையை வைத்து தேடியபோது, எக்ஸ் பக்கத்தில் ஒரு ஐடி காணக் கிடைத்தது. அதில், அந்த நியூஸ் கார்டு பதிவிடப்படவில்லை.
மேலும் விசாரணைக்காக தொடர்புடைய கீ வேர்டுகளுடன் கூகுளில் சர்ச் செய்தோம். அதில், சிவராஜ்குமார் தனக்கு இருக்கும் நோய் குறித்து பகிர்ந்துகொண்ட செய்திகள் கிடைத்தன. ஆனால், அது புற்றுநோய் தானா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள பைரதி ரங்கல் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக மிர்ச்சி கன்னடா யூட்யூப் சேனலுக்கு அவர் பேட்டி அளித்திருந்தார். அதில், “எல்லோரையும் போல நானும் ஒரு மனிதன் தானே. எனக்கு ஒரு நோய் இருப்பது உண்மைதான். அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். எனக்கு பிரச்னை இருக்கிறது என்று சொன்னபோது அதிர்ந்துவிட்டேன்.பிறகு தைரியப்படுத்திக்கொண்டேன்.
நான்கு கட்டங்களாக சிகிச்சை பெற வேண்டும். இரண்டு முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்டங்கள் முடிந்த பிறகு அமெரிக்காவில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளேன். ஜனவரி இறுதியில் முழுவதுமாக குணமடைந்துவிடுவேன்” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக டைம்ஸ் நவ் உள்பட பல்வேறு செய்தி இணையதளங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அந்த பேட்டியிலும் தனக்கு எங்கேயும் கேன்சர் இருப்பதாக அவர் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து, வைரல் நியூஸ் கார்டு போலவே நேற்று முதல் தமிழ் செய்தி இணையதளங்களில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அவர் சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு எழுதி வைத்துவிட்டதாகவும் தலைப்பு வைத்து செய்திகள் வெளியாகி இருந்தன. வலைப்பேச்சு யூட்யூப் பக்கத்தில் வெளியான வீடியோவில் உள்ள தரவுகளை வைத்து இந்த செய்திகள் எழுதப்பட்டு இருந்தன.
குறிப்பிட்ட வலைப்பேச்சு யூட்யூப் சேனல் நேற்று வெளியிட்ட வீடியோவை பார்த்தோம். அதில் சினிமா பத்திரிகையாளர் அந்தணன், “சிவராஜ்குமார் அமெரிக்கா சென்றுவிட்டார். அவருக்கு ஒரு பிரச்னை என்று சொல்லியிருந்தோம். அவருக்கு கேன்சர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரை வைத்து படம் இயக்குவதாக இருந்த ரவி அரசுவிடம் ஆறு மாதங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டார்.
சிவராஜ்குமாரை பற்றி கேள்விப்படும் தகவல் இப்பேர்பட்ட ஒரு மனிதர் இருக்க முடியுமா என்பது போல உள்ளது. ‘
புனித் ராஜ்குமார் எவ்வளவு நல்லவராக இருக்கிறாரோ அவரை விட இவர் ரொம்ப நல்லவராக இருக்கிறார். நடிகர் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பாக மகன்களுக்கு சொத்துகளை பிரித்து தந்துள்ளார். அப்போது, தனக்கு வந்த சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளித்துவிட்டார். நான் சினிமாவில் நடித்து சம்பாதிப்பது எனக்கு போதும் என தெரிவித்துவிட்டார்” என்று கூறினார்.
அதாவது, ஏற்கனவே நடந்த சொத்து பிரிப்பின் போது தனது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளித்துவிட்டார் என்றுதான் அந்தணன் கூறுகிறார். அதனால், தற்போதைய உடல்நலக் குறைவுக்கும் சொத்துகள் அளித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது புலப்பட்டது.
முடிவு
சிவராஜ்குமார் உடல்நல பாதிப்புக்குப் பிறகு தனது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு எழுதிவைத்துவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது. முன்பே நடந்த சம்பவத்தை தற்போதைய அவருடைய உடல்நலப் பிரச்னையுடன் சேர்த்து தவறாக பரப்பி வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.