நடிகை ராதிகா ஆப்தேக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த ‘தோனி’ படத்தின் மூலம் அறிமுகமானார். “ரத்த சரித்தரம், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர். துணிச்சலான நடிகையான ராதிகா ஆப்தே சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார். இவர் வயலின் இசைக்கலைஞரான பெனடிக்ட் டெய்லரை காதலித்து 2012ல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இதனையடுத்து திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து ராதிகா ஆப்தேக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates