சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு வெளியாகுமா? என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருந்த நிலையில், அதெல்லாம் இல்லை சொன்ன தேதிக்கு ஒரு நாள் முன்னாடியே வந்து கல்லா கட்டுறோம் பாருங்க என காலரை தூக்கி விட்டுக் கொண்டு வைல்டு ஃபயராக புஷ்பா 2 வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக காத்திருக்கிறது.
படம் ரிலீஸாக இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங்கில் புஷ்பா 2 பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் செய்யாத அளவுக்கு ஓவர்சீஸ் வசூலை புஷ்பா 2 அள்ளும் எனக் கூறுகின்ற்னார்.
வரும் டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 வைல்ட் ஃபயராக வரும் என டோலிவுட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தை பார்க்க கோலிவுட் ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கங்குவா போல ஆகிடுமா?: ஓவர் பில்டப்புடன் பெரிய படங்கள் வெளியானாலே தற்போது எல்லாம் பயம் தான் வந்துவிடுகிறது. படம் வெளியாவதற்கு முன்பாக 1000 கோடி ப்ரீ சேல் ஆகிவிட்டது என்றும் 2000 கோடி வசூல் செய்யும் என்றும் கூறுகின்றனர். ஆனால், படம் வெளியான பின்னர், 150 கோடி வசூல் கூட செய்யவில்லை என முடங்கிப் போய் விடுகின்றனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட அல்லு அர்ஜுன் படத்தின் வசூல் குறித்து பில்டப் செய்யாமல் தமிழ் மொழியைத் தூக்கி நிறுத்திப் பேசி ஒரு படத்தை எப்படி புரமோட் செய்யவேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர் போலவே பேசியிருந்தார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
500 கோடி பட்ஜெட்: புஷ்பா முதல் பாகம் தமிழ், இந்தி ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், 500 கோடி அளவுக்கு வசூல் ஈட்டி பான் இந்தியா வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில், 500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 படத்தை உருவாக்கி உள்ளனர். 1000 கோடி வசூலை டார்கெட் செய்தே படக்குழு அனைத்து வேலைகளையும் பார்த்து வருகின்றனர். புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர், டிரெய்லர் என அனைத்துக்குமே ஒரு பெரிய ஹைப் உருவாகி வருகிறது.
அமெரிக்காவில் டிக்கெட் புக்கிங் அசத்துது: புஷ்பா 2 வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதுவரை அமெரிக்காவில் 1.4 மில்லியன் டாலர்கள் வசூலை சுமார் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு நிகழ்த்தியிருப்பதாக கூறுகின்றனர். இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாயை 10 நாட்களுக்கு முன்னதாகவே ப்ரீமியர் காட்சிக்காக வசூல் செய்துள்ளது புஷ்பா 2. இன்னும் 10 நாட்களில் மேலும், டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று முதல் நாளில் அமெரிக்காவில் மட்டுமே 40 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் ஓவர்சீஸில் மெகா வசூல் வேட்டையை நடத்தும் என்றும் கூறுகின்றனர்.