Pushpa 2 Box Office: முதல் நாளிலேயே 3 சரித்திர ரெக்கார்டுகளை தகர்த்த புஷ்பா 2.. இத்தனை கோடி வசூலா?

0

சென்னை: அல்லு அர்ஜுனின் அசுர தாண்டவத்துடன் வெளியாகி இருக்கும் புஷ்பா 2 படத்தை முதல் நாளே தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்ட முக்கிய காரணமே புஷ்பா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிதான். தமிழ் சினிமா நடிகர்களால் இந்தி ரசிகர்களை கவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் டோலிவுட் நடிகர்கள் முதல் நாளிலேயே சொந்த மண்ணிலும் இந்தி பெல்ட்டிலும் தலா 50 கோடிக்கும் அதிகமான ஓபனிங் வசூல் வேட்டையை நடத்தி மாஸ் காட்டி வருகின்றனர்.

புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய “ஊ சொல்றியா மாமா” பாடல் டோலிவுட், கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் வெறித்தனமான ஹிட் அடித்த நிலையில், ஏகப்பட்ட இந்தி ரசிகர்களுக்கு புஷ்பா 2 படமும் பிடிக்க ஆரம்பித்து விட்டது. மகாராஷ்ட்ராகாரராகவே புஷ்பா இந்தி வெர்ஷனில் வரும் நிலையில், இன்னமும் அங்கே லோக்கல் கனெக்ட் அதிகமாக ஈர்க்கப்பட்டு படம் பட்டையை கிளப்பி வருகிறது.

முதல் நாளிலேயே ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் சாதனையை புஷ்பா 2 முறியடித்த நிலையில், மேலும், 2 சாதனைகள் முறியடிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்லு அர்ஜுன் வீட்டில் கொண்டாட்டம்: புஷ்பா 2 படத்துக்கு உலகளவில் மிகப்பெரிய ஓபனிங் முதல் நாளே கிடைத்த நிலையில், அல்லு அர்ஜுன் வீட்டில் நேற்று நள்ளிரவே சரவெடி வெடித்து சக்சஸ் பார்டியும் நடந்துள்ளது. புஷ்பா 2 படத்துக்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி ஒட்டுமொத்தமாக படமாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என பலரும் விமர்சித்து வரும் நிலையில், போட்ட 500 கோடியும் தப்பித்தது என்கிற சந்தோஷத்தில் அல்லு அர்ஜுன், சுகுமார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சந்தோஷத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

மூன்று சாதனைகள் முறியடிப்பு: ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் 134 கோடி ரூபாய் நெட் பிராஃபிட் பார்த்தது. புஷ்பா 2 திரைப்படம் அதை முறியடித்து 150 கோடி ரூபாய் வரை இந்தியளவில் முதல் நாளில் நெட் பிராஃபிட்டை பார்த்துள்ளது. கிராஸ் கலெக்ஷனாக 203 கோடி ரூபாய் வரை முதல் நாளில் புஷ்பா 2 வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டாவதாக முதல் இந்திய படம் இந்தியாவில் 150 கோடி நெட் பிராஃபிட் சாதனையை படைத்திருக்கிறது என்கிற பெருமையை புஷ்பா 2 நடத்தியிருக்கிறது.

3வதாக இந்தி மற்றும் தெலுங்கில் முதல் நாளில் தலா 50 கோடிக்கும் அதிகம் வசூல் செய்த படமாக புஷ்பா 2 மாறியுள்ளது. இந்தி பெல்ட்டில் மட்டும் முதல் நாளில் 66 கோடி ரூபாயை அள்ளி பாலிவுட் நடிகர்களுக்கே பயத்தை காட்டியிருக்கிறது. கேஜிஎஃப் 2 திரைப்படம் முதல் நாளில் 50 கோடி ரூபாய் இந்தி பெல்ட்டில் வசூல் செய்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் ஆல் டைம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக மாறியிருக்கிறது.

உலகளவில் முதல் நாள் வசூல்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ராவ் ரமேஷ், ஜகபதி பாபு, ஸ்ரீலீலா என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்த புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முதல் நாளில் 275 கோடி முதல் 300 கோடி வசூல் வேட்டை என பாக்ஸ் ஆபிஸ் போஸ்டர் வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே தெரிகிறது.

Share.

Leave a Reply