ஹைதராபாத்: நடிகை சமந்தா, தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். நடிகையாக மட்டும் இல்லாமல், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டக்கூடியவராகவும், அதிக கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் திகழும் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 3.70 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர். இவர் தற்போது, மண்ணே இல்லாமல் பயிர் செய்யக்கூடிய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகியாக உள்ளார். இதுமட்டும் இல்லாமல், பாலிவுட்டிலும் கவனம் பெறும் நடிகையாக உள்ளார். தைரியமான கதாபாத்திரத் தேர்வு, இவரது சினிமா வாழ்க்கைத் தரத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகின்றது. தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமான சமந்தா, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
குறிப்பாக விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதுமட்டும் இல்லாமல், ஒரு கட்டம் வரை கதாநாயகர்களின் ஜோடியாக மட்டும் நடித்து வந்த சமந்தா, அதன் பின்னர் தனது கதாபாத்திரத்திற்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி, அப்படியான கதைகளைத் தேர்வு செய்து நடித்தார்.
கதாபாத்திர தேர்வு: விக்ரம் உடன் இவர் இணைந்து நடித்த, பத்து எண்றதுக்குள்ள படத்தில், இரட்டை வேடங்களில் மிரட்டிவிட்டிருப்பார். குறிப்பாக, மிகவும் ஆக்ரோஷமான பெண் கதாபாத்திரத்தில் அவர் நடித்து, பலரது கவனத்தினை ஈர்த்தது. தமிழில் எந்த அளவுக்கு பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து தனது சினிமா மார்க்கெட்டினை உறுதி செய்தாரோ, அதேபோல், தெலுங்கிலும் சிறப்பான கதாபாத்திரங்கள், வெற்றிப் படங்களில் கவனம் செலுத்தி முன்னணி கதாநாயகியாக மாறினார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
திருமண வாழ்க்கை: கடந்த 2017ஆம் ஆண்டு, நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் சமந்தா. மகிழ்ச்சியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2021ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தனது விவாகரத்துக்குப் பின்னரும் சினிமாவில் சமந்தாவின் கொடி பறந்துகொண்டுதான் உள்ளது. சொந்த வாழ்க்கை பிரச்னை இப்படி என்றால், அறியவகை நோயான, மையோசிடிஸ் நோய் மூலம், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தீவிரமான சிவ பக்தராகவும் உள்ளார் சம்ந்தா. கடந்த மாதத்தில் தனது தந்தையை இழந்தார்.
முதலீடு: இப்படியான நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஸ்டார்டப் நிறுவனமான, அர்பன் கிஷான் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளாராம். இந்த நிறுவனத்தில், மண்ணே இல்லாமல், தண்ணீர் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை வைத்து, காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும், இந்த உற்பத்தி திறன் மூலம், மகசூலை அதிகம் பெருக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது. 50 வகையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் பயிரப்பட்டு வருகின்றதாம். கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படும் சமந்தா, அவ்வப்போது அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றார்.