சென்னை: நடிகர் ஷாரிக் ஹாசன் மற்றும் மரியா ஜெனிஃபர் திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சென்னையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கோலிவுட் பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சூழ இந்த திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்தது.,
மிகவும் அழகாக இந்த திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து தங்களது தேனிலவை ஷாரிக் மற்றும் மரியா இருவரும் மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களின் திருமணம் அவர்களை மிகப்பிரபலமாக்கியுள்ளது. தன்னைவிட மூன்று வயது பெரியவரான மரியாவை 9 வயது குழந்தையுடன் திருமணம் செய்துள்ளார் ஷாரிக்.
ஷாரிக் & மரியா ஜோடி: நடிகர் ஷாரிக் ஹாசன் மற்றும் மரியா ஜெனிஃபர் திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கோலிவுட் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சூழ இந்த திருமணத்தை ஷாரிக்கின் பெற்றோரும் நட்சத்திர தம்பதியுமான நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் இருவரும் நடத்தி முடித்தனர். முன்னதாக தான் மிகவும் எளிமையாக தன்னுடைய திருமணத்தை திட்டமிட்டதாகவும் ஆனால் தன்னுடைய அப்பாவும் அம்மாவும் அதை மிகவும் பிரம்மாண்டமாக்கிவிட்டதாகவும் ஷாரிக் திருமணத்தை தொடர்ந்து தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார்.
பிரபலமான ஜோடி: முன்னதாக பென்சில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு இந்தப் படங்கள் கொடுக்காத வரவேற்பை அவரது இந்த திருமணம் கொடுத்துள்ளது. மரியாவை கடந்த ஒரு ஆண்டாக துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்துள்ளார் ஷாரிக். அவரைவிட மரியா மூன்று வயது பெரியவர் மற்றும் ஏற்கனவே திருமணமாகி 9 வயது குழந்தைக்கு தாயாக இருப்பவர் என தெரிந்து தன்னை மாற்றிக் கொள்ளாமல் மரியாவைத் திருமணம் செய்துள்ளார் ஷாரிக். இதனால் இவர்களின் இந்த திருமணம் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. வரதட்சணைக்காகத்தான் ஷாரிக் மரியாவை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
மாலத்தீவிற்கு ஹனிமூன்: இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் திருமணத்திற்கு முன்பும் பின்பும் அடுத்தடுத்த யூடியூப் சேனல்களுக்கு இந்த தம்பதி தொடர்ந்து பேட்டிகளை கொடுத்தது. சில பேட்டிகளில் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸும் கலந்துக் கொண்டனர். தன்னுடைய மகனை கலாய்த்து தள்ளினர். இதனிடையே அடுத்தடுத்த இடங்களுக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் மரியா ஜெனிஃபர் இருவரும் ஹனிமூனுக்கு சென்று வருகின்றனர். தற்போது இவர்கள் மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர். இந்த ஹனிமூனில் இவர்கள் தனிமூனாக கொண்டாடாமல் மரியாவின் 9 வயது மகளையும் உடன் அழைத்து சென்றுள்ளனர்.
மகளுக்கு சர்ப்பிரைஸ்: தன்னைவிட தன்னுடைய மகளை ஷாரிக் மிகவும் அக்கறையாக கவனித்துக் கொள்வதாகவும் அவளை ஒரு தந்தையாக தான் பார்த்துக் கொள்வேன் என்று கூறுவதாகவும் மரியா முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த ஜோடி மாலத்தீவிற்கு சென்றுள்ளது குறித்து விமானத்திற்குள் இருக்கும்படியான வீடியோவை பகிர்ந்துள்ளது. இதில் மாலத்தீவிற்கு செல்லும் பயணத்தை மகளுக்காக ஷாரிக்தான் திட்டமிட்டதாகவும் அவருக்கு சர்ப்பிரைஸ் என்றும் மரியா கூறுவதாகவும் இந்த வீடியோ காணப்படுகிறது.