Tamil cinema 2024: 2024 ல் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட தவறிய திரைப்படங்கள் ஒரு பார்வை..!

0

தமிழ் சினிமா 2024

2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. அதைப்போல கண்டிப்பாக ஹிட்டாகும் என நினைக்கப்பட்ட திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. மேலும் ஹிட்டாகாது என கருதப்பட்ட திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த வகையில் தரமான ஒரு சில படங்கள் திரையில் ரசிகர்களால் கொண்டாட தவறப்பட்டும் இருக்கின்றன. திரையில் அப்படங்கள் வெளியானதே தெரியாமல் பின்பு OTT யில் வெளியானதும் படத்தை பார்த்துவிட்டு ,இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறிவிட்டோமே என ரசிகர்கள் பீல் பண்ண படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்

பைரி

ஜான் கிளாடி இயக்கத்தில் முற்றிலும் புது முகங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பைரி. பிப்ரவரி மாதம் திரையில் வெளியான இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை தான் பெற்றது. இருப்பினும் இப்படத்தை ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை. அதைத்தொடர்ந்து பைரி திரைப்படம் OTT யில் வெளியானதும் இப்படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு திரையில் பைரி படத்தை மிஸ் பண்ணிவிட்டோமே என கூறி வருகின்றனர். படம் பார்த்த பலரும் வெற்றிமாறனின் ஸ்டைலில் இப்படம் இருப்பதாக பாராட்டினார்கள். விமர்சனங்களும் மிக சிறப்பாகவே இருந்தன. இருந்தாலும் திரையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டிய பைரி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாட தவறிவிட்டார்கள்

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

ஜெ.பேபி

அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெ.பேபி. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் மார்ச் மாதம் திரையில் வெளியானது. மிகவும் எதார்த்தமான எமோஷலான இப்படம் திரையில் வெளியானபோது ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு OTT யில் இப்படம் வெளியானதும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

அதோமுகம்

இதைத்தொடர்ந்து சுனில் தேவ் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியான அதோமுகம் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றாலும் திரையில் ஓடவில்லை. மார்ச் மாதம் திரையில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு OTT யில் வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படமும் திரையில் வெற்றிபெற்றிருக்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று தான்.

ஒரு நொடி

அதைப்போல சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியான ஒரு நொடி திரைப்படமும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றன. தமன் குமார் நடிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் திரையில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு OTT வெளியானதும் இப்படத்தை ரசிகர்கள் பாராட்டி புகழ்ந்து வந்தனர்.இப்படமும் திரையில் வெற்றிபெற்றிருக்க வேண்டிய படமாக இருந்திருக்கவேண்டும்.

ஹாட்ஸ்பாட்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், சாண்டி, ஜனனி ஆகியோரின் நடிப்பில் வெளியான ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தன. ஆனால் திரையில் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இப்படத்தின் இயக்குனர் கூட ரசிகர்களை திரையில் வந்து படத்தை பார்க்கும்படியும், படம் சரியில்லை என்றால் என்னை கேள்வி கேளுங்கள், கண்டிப்பாக இப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்றெல்லாம் கூறினார். இருந்தாலும் இப்படம் திரையில் வரவேற்பை பெறவில்லை. அதைத்தொடர்ந்து OTT யில் இப்படம் வெளியானதும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Share.

Leave a Reply