சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் மதராசி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை வேதிகா. நல்ல நிறம், அழகு, ஸ்லிம் உடம்பு என ரசிகர்களை கவர்ந்த வேதிகாவிற்கு எதிர்பார்த்த படி சினிமா வாய்ப்பு அமையவில்லை. எல்லா திறமையும் இருந்தும் இவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற கவலை இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது மாலத்தீவு சென்று இருக்கும் வேதிகா, பிகினியில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த வேதிகாவிற்கு தாய் மொழி கன்னடமாக இருந்தாலும், அவருக்கு வாழ்வு கொடுத்தது தமிழ் சினிமா தான். சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலாக இருந்த இவர் ஒரு சில விளம்பர படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த விளம்பரத்தை பார்த்த நடிகர் அர்ஜூன், தான் இயக்கிய மதராஸி படத்தில் வேதிகாவை அறிமுகம் செய்துவைத்தார். அந்த சுமாராக ஓடியதைத் தொடர்ந்து, சிம்புவுடன் காளை படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் சிம்புவுக்கு போட்டியாக டான்ஸ் ஆடி அசத்தி இருந்தார்.
அடுத்தடுத்த படத்தில்: அதன் பாலாவின் இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் வேதிகாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன்பின், காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ராப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்ற வேதிகாவிற்கு, தெலுங்கும், கன்னட, இந்தி படங்கள் கை கொடுக்க அந்த மொழியில் பல படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்துள்ள Fear திரைப்படம் டிசம்பர் 14ந் தேதி வெளியாக உள்ளது.
கஜானா படத்தில்: மேலும், கஜானா என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இதில் யோகி பாபு, இனிகோ பிரபாகர்,சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 27ந் தேதி வெளியாக உள்ளது. பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கி உள்ள இந்த படத்தின் கதை 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் அரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட நாக ரத்தினம் அடங்கிய பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
மாலத்தீவில் வேதிகா: எப்படியாவது தனக்கு திறமையை நிரூபிக்கும் வகையில் ஒரு நல்ல படம் அமையும், வாய்ப்புகள் வரும், நாமும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவோம் என நம்பிக்கையில் இருக்கும் வேதிகா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, இவர் மாலத்தீவு சென்ற போது பிகினியில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.