Year Ender 2024: இந்த ஆண்டு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட 4 விவாகரத்துகள்!

0

Kollywood Divorce 2024: 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல்வேறு அருமையான திரைப்படங்களைத் தந்தது. அதுவும் இந்த ஆண்டில் தான் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளிவந்தது. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் திரைப்படமும் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தது.

சமூகத்தில் பிரபலமாக இருந்தால், அவர்களால் சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ முடியாது. அவர்களின் நடவடிக்கையும், செயல்களும் காட்டுத்தீ போல் மக்களிடையே பரவிவிரும். அதுவும் திரைப் பிரபலங்களின் திரை வாழ்க்கை மட்டுமின்றி, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அதிகமாக பேசப்படும்.

அதுவும் திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருந்தால், அது பல நாட்கள் பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருக்கும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் சில கோலிவுட் திரைப் பிரபலங்களின் விவாகரத்துகள் மிகவும் பரபரப்பாக பல மாதங்கள் பேசப்பட்டன. இப்போது 2024-ல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட 4 விவாகரத்துகள் குறித்து காண்போம்.

1. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவை மணந்தார். இவர் இருவரும் சுமார் மூன்று தசாப்தங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் திடீரென்று தங்கள் திருமணத்தை முடிக்க முடிவு செய்வதாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுவும் இந்த அறிக்கையை ஒரு வழக்கறிஞர் மூலம் வெளியிட்டனர். இத்தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மகள்கள் ரஹீமா மற்றும் கதீஜா மற்றும் மகன் ஏஆர் அமீன்.

2. ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது நீண்ட நாள் காதலியான பாடகி சைந்தவியை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற அழகான ஒரு மகள் 2020-ல் பிறந்தார். ஆனால் இவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பிரிந்து செல்ல முடிவு செய்து சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர். அதுவும் இந்த பிரிவு முடிவை இவர்கள் இருவரும் சேர்ந்து தான் எடுத்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. இவர் தமிழில் ஏராளமான வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர் க்ளீன் என்று அழைக்கும் வகையில் எந்த கிசுகிசுக்களிலும் இவரது பெயர் அடிபட்டது இல்லை. மேலும் இவர் பல ஆண்டுகளாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்து வைத்திருந்தார்.

ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனது மனைவியை பிரிவதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்திருந்தது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மனைவி, தனது கணவர் தன்னுடன் கலந்தாலோசிக்காமல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் கூறினார்.

பின்பு நடிகர் ஜெயம் ரவி பேட்டி ஒன்றில், இந்த திருமண உறவில் தனக்கு எந்த மரியாதையும் கிடைக்கவில்லை என்று கூறினார். இவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சிக்குமாறு குடும்பநல நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

4. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தனுஷின் திரை வாழ்க்கையே வேற லெவலில் சென்றுவிட்டது. இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரும் 2022 ஆம் ஆண்டு பிரிந்து செல்வதாக முடிவெடுத்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டனர். இருப்பினும் இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்க இரு குடும்பத்தினரும் முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. சென்னை குடும்ப நல நீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து அளித்தது.

Share.

Leave a Reply