சென்னை: பெண்களின் ஒவ்வொரு பருவமும் சிறப்பாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அவர்களது தாய்மை பருவம் மிகச்சிறப்பாகவும் அவர்களை முழுமை அடைய செய்வதாகவும் அமைந்து வருகிறது. அந்த வகையில் சாதாரண பெண்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் இவற்றிலிருந்து மாறுபட முடியாது.
இன்னும் சில தினங்களில் இந்த 2024ம் ஆண்டு நிறைவடையவுள்ளது. இந்த ஆண்டில் பல சம்பவங்களை கோலிவுட் முதல் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து வுட்களிலும் ரசிகர்கள் பார்த்த நிலையில், இந்த ஆண்டில் இந்திய அளவில் தாய்மையடைந்த பிரபலங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தாய்மை அடைந்த பிரபலங்கள்: தாய்மை அடைந்த பிரபலங்கள்: ஒவ்வொரு பெண்ணுக்குமே தாய்மை என்பது ஒரு வரமாகவே பார்க்கப்படுகிறது. காலம் காலமாக தாய்மையை ஒரு பேறாக பார்க்கும் மனநிலையே பெண்களிடம் காணப்படுகிறது. தங்களின் குடும்ப வாரிசுகளை உருவாக்கவும் அடுத்த தலைமுறையை சிறப்பாக கொண்டு செல்லவும் பெண்கள் மிகவும் விருப்பத்துடனே செயல்பட்டு வருகின்றனர். இவற்றிற்கு பிரபலங்கள், சாதாரண பெண்கள் என யாரும் விதிவிலக்காக இருந்து விட முடியாது. அந்த வகையில் திரைத்துறையில் இந்த ஆண்டில் அதிகமான பிரபலங்கள் கர்ப்பம் தரித்ததையும் தொடர்ந்து தாயானதையும் பார்க்க முடிந்தது.
அமலா பால் மகன் இலாய்: இந்த வரிசையில் தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகை அமலாபால் ஜெகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இரண்டாவதாக திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிக்கு இந்த ஆண்டில் கடந்த ஜூன் 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய குழந்தைக்கு இலாய் என்று பெயரிட்டுள்ளார் அமலா பால். முன்னதாக கர்ப்ப கால வீடியோக்கள், புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த அமலா பால், தன்னுடைய குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் தன்னுடைய விடுமுறைக் கொண்டாட்டங்களிலும் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகிறார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
இர்பானின் பெண் குழந்தை: இதனிடையே அடுத்ததாக பிரபல youtuber இர்பான் மற்றும் ஆசிஃபா தம்பதிக்கும் இந்த ஆண்டில்தான் குழந்தை பிறந்தது. இவர்களும் தங்களது கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்த நிலையில் குழந்தையின் பாலினம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார் இர்பான். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், இந்த விவகாரத்தில் அவர்மீது நடவடிக்கை எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இந்த ஜோடிக்கு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி அவர் கூறியபடியே பெண் குழந்தை பிறந்தது.
தீபிகா படுகோனுக்கும் பெண் குழந்தைதான்: இதனிடையே பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்குக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் இந்த ஆண்டில் அவர்களின் முதல் குழந்தையை ஈன்றுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக கர்ப்ப கால புகைப்படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை இந்த ஜோடி கவர்ந்த நிலையில், அவரது குழந்தை பிறப்பு குறித்தும் அறிவித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தனர். தங்களின் குழந்தைக்கு துஆ சிங் படுகோன் என்று இவர்கள் பெயரிட்டுள்ளனர். இதனிடையே, தன்னுடைய குழந்தைக்கு அமைதியான சூழலை கொடுக்கும் வகையில் பல கோடி செலவழித்து புதிய வீட்டை இவர்கள் வாங்கியுள்ளனர்.
வருண் தவான் மகள் லாரா: இதனிடையே பாலிவுட்டில் சூப்பர் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கும் வருண் தவான் -நடாஷா தலால் தம்பதிக்கும் இந்த ஆண்டில்தான் குழந்தை பிறந்துள்ளது. காதல் மணம் செய்துக் கொண்ட இந்த ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு லாரா என்று பெயரிட்டுள்ளது இந்த ஜோடி. இவர்களை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அலி ஃபாசல் மற்றும் நடிகை ரிச்சா சதா ஜோடிக்கு கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களின் குழந்தைக்கு ஜுனைரா ஐடா ஃபாசல் என்று இந்த தம்பதி பெயரிட்டுள்ளனர்.
நீனா குப்தாவின் பேத்தி: இதனிடையே பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவின் மகளும், பேஷன் டிசைனருமான மாசாபா குப்தா மற்றும் நடிகர் சத்யதீப் மிஸ்ரா ஜோடிக்கும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஆண்டில் இவர்களின் திருமணம் நடந்த நிலையில் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இந்த ஆண்டில் பிரபலங்கள் பலரும் குழந்தைகளை ஈன்றுள்ள நிலையில், அதிகமானவர்களுக்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.