அஜித் படத்தில் இணைந்த ஆடை பட நடிகை.. த்ரிஷா திடீர்னு இப்படி மாறிட்டாரேன்னு யாரும் ஷாக் ஆக வேண்டாம்!

0

சென்னை: விடாமுயற்சி படத்தில் கடைசி நேரத்தில் திடீரென ஒரு நடிகரை படக்குழு இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது. கோட் சூட்டில் மாஸ் போஸ் கொடுத்த அஜித் சட்டென வேட்டி சட்டையில் செம க்யூட்டாக நிற்க அவருக்கு அருகே சேலை அணிந்திருப்பது த்ரிஷாவா என பார்த்த ரசிகர்களுக்கு என்ன முகம் வேற மாறியிருக்கே என்கிற ஃபீல் வரத்தான் செய்யும்.

ஆனால், அது த்ரிஷாவே கிடையாது. ஆடை படத்தில் நடித்த நடிகை தான் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் ஆன்போர்ட் ஆகியுள்ளார். அந்த அறிவிப்பை தற்போது விடாமுயற்சி டீம் அஜித்துடன் அவர் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

வரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகவுள்ள நிலையில், டீசர் எல்லாம் வெளியிட்ட பின்னர், தற்போது நடைபெற்று வரும் கடைசி கட்ட படப்பிடிப்பில் இந்த பிரபலம் இணைந்துள்ளார் என்கின்றனர்.

மகிழ் திருமேனி படம்: சிறுத்தை சிவா, எச். வினோத் உள்ளிட்ட இயக்குநர்களின் இயக்கத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் இன்னமும் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட குட் பேட் அக்லி படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடைசி கட்ட விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் குமார் இணைந்துள்ளார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

விஜய், அஜித், சூர்யா ஜோடி: நடிகை நயன்தாராவை தமிழ் சினிமாவில் எந்தவொரு முன்னணி நடிகரும் கண்டுக்கொள்வதை போலவே தெரியவில்லை. ஏகப்பட்ட சர்ச்சைகள் அவரை சுற்றி வரும் நிலையில், த்ரிஷா விஜய், அஜித் மற்றும் சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் ஓய்வே இன்றி நடித்து அசத்தி வருகிறார். விஜய்யுடன் லியோ படத்தில் ஹீரோயினாக நடித்த அவர் கோட் படத்தில் குத்தாட்டம் ஒன்றையும் போட்டிருந்தார். அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என பேக் டு பேக் 2 படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் இவர் தான் ஹீரோயின். கமலின் தக் லைஃப், டொவினோ தாமஸின் ஐடென்டிட்டி மற்றும் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா என லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே போகிறது.

விஜே ரம்யா: விடாமுயற்சி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் த்ரிஷா இணைந்து வரும் காட்சிகள் சமீபத்தில் புகைப்படங்களாக வெளியான நிலையில், தற்போது ஆடை படத்தில் அமலா பால் உடன் இணைந்து நடித்த தொகுப்பாளினி ரம்யா விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார் என புதிய அப்டேட்டை சற்றுமுன் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

வேட்டி சட்டையில் அஜித்: குட் பேட் அக்லி படத்தின் கடைசி நாள் படப்பின்போது ஸ்லிம் தோற்றத்தில் காட்சியளித்த அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்கில் கோட் சூட் அணிந்து ஜேம்ஸ் பாண்ட் போல தோன்றினார். இந்நிலையில், தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் விதத்தில் தற்போது வேட்டி, சட்டை அணிந்து அதே ஒல்லியான தோற்றத்தில் அஜித் குமாரும் அவருடன் விஜே ரம்யாவும் இருக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். வரும் பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தியேட்டர்களை தெறிக்கவிடக் காத்திருக்கிறது. பாலாவின் வணங்கான் மற்றும் ஷங்கரின் கேம் சேஞ்சர் படங்கள் தமிழ்நாட்டில் கல்லா கட்டுமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

Share.

Leave a Reply