அனைவரையும் கலங்க வைக்கும் வெற்றிமாறனையே கண்ணீர் விட வைத்த விஜய் சேதுபதி!

0

வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்’விடுதலை’ இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ‘விடுதலை பார்ட் 2. நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் மீது கோலிவுட் வட்டாரமே மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. வெற்றிமாறனின் முந்தைய படங்களை போல் ‘விடுதலை 2’ பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி நாள் ஷுட்டிங் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் பெயருக்கு ஏற்ப தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் வெற்றிமாறன். இயக்குனர்களில் தனியொரு ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ளவர்களில், இவர் முக்கியமானவர். இவரது இயக்கத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ‘விடுதலை 2’ படத்தின் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து இப்படத்தின் ஷுட்டிங் ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்தது.

கடந்தாண்டு சூரியை ஹீரோவாக்கி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியானது ‘விடுதலை பார்ட் 1’. விஜய் சேதுபதி வாத்தியாராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரிலீசான இப்படம் காவல்துறையின் அதிகார அத்துமீறல்களை உண்மைக்கு நெருக்கமாக பேசி இருந்தது. பலரின் பாராட்டுக்களை பெற்று ‘விடுதலை’ வேறலெவல் ஹிட்டடித்தது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

பிரிவுக்கு பின் ஜிவி பிரகாஷுக்காக சைந்தவி வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ.. ரசிகர்கள் இன்பதிர்ச்சி!

இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘விடுதலை 2’ படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாகம் என நீண்ட காலமாக இப்படத்தின் ஷுட்டிங் நடந்து வந்த காரணத்தால், படப்பிடிப்பின் கடைசி நாளில் நாளில் அனைவரையும் இயக்குனர் வெற்றிமாறன் பேச சொல்லி இருக்கிறார்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி 40 நிமிடங்களுக்கு மேலாக இப்படத்தில் பணியாற்றியது தொடர்பாக மனம் விட்டு பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சை கேட்டு இயக்குனர் வெற்றிமாறன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனையடுத்து மொத்தமாக ‘விடுதலை 2’ படப்பிடிப்புக்கு பூசணிக்காய் உடைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெற்றிமாறன் படங்களில் வரும் எமோஷனல் மற்றும் உண்மை காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுவது வழக்கம்.

தல வேண்டாம் AK…உலகநாயகன் வேண்டாம் KH

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் பேச்சைக்கேட்டு வெற்றிமாறன் அழுதுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் நாளை இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும், ‘விடுதலை பார்ட் 2’ டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply