இலியானாவின் வாழ்க்கையை மாற்றிய Fair & Lovely

0

இலியானாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்திருக்கும் இலியானா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் மனதார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.விளம்பர படம் மூலம் தன் கெரியரை துவங்கியவர் இலியானா. அதிலும் குறிப்பாக ராகேஷ் ரோஷன் இயக்கிய ஃபேர் அன்ட் லவ்லி(Fair & Lovely) விளம்பரம் தான் இலியானாவின் கெரியரை திசை திருப்பிவிட்டது.

அந்த விளம்பரம் வைரலாக இலியானாவை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தது. கடந்த 2006ம் ஆண்டு வெளியான தேவதாசு தெலுங்கு படம் மூலம் நடிகையானார் இலியானா. அதன் பிறகு அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து போக்கிரி படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அந்த ஹிட் கொடுத்த கையோடு இலியானா கோலிவுட் வந்தார். கேடி படம் மூலம் தமிழ் திரேயுலகிற்கு வந்த இலியானா பின்னர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் நண்பன். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தார் இலியானா. அவர் கோடிகளில் சம்பாதித்ததை பார்த்து பிற நடிகைகள் பொறாமைப்பட்டதாக பேச்சு உண்டு.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

அப்படி தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது பர்ஃபி படம் மூலம் பாலிவுட் சென்றார். அதன் பிறகு பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். மும்பையில் தங்கி தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் இலியானா. டோலிவுட்டை போன்று பாலிவுட்டில் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.

ஐஸ்வர்யா ராய் ஆசைப்படாத மூனும் நடந்துடுச்சு: ஆசைப்பட்ட அந்த ஒன்னு மட்டும் இன்னும் நடக்கலயே

பர்ஃபி படம் பார்த்த அனைவரும் இலியானாவின் நடிப்பை பாராட்டினார்கள். அப்படிப்பட்ட இலியானா தனக்கு நடிக்க பிடிக்கவில்லை என்று அம்மாவிடம் சொன்னது உண்டு.முதல் படத்தில் நடித்தபோது தான், அம்மா நான் தொடர்ந்து நடிகையாக இருக்க விரும்பவில்லை என கூறியிருக்கிறார் இலியானா.

ரோலக்ஸ் தான் அடுத்த படமா.?

படப்பிடிப்பில் ஒரே பதட்டமாக இருக்குமா என்று தெரிவித்திருக்கிறார். அதை கேட்ட அம்மாவோ எல்லாம் சரியாகிவிடும் என இரவு 3 மணிக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். நடுச்சாமத்தில் அம்மா கொடுத்த அறிவுரையை என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்கிறார் இலியானா.

Share.

Leave a Reply