இவங்க எல்லாம் தனுஷ் மாதிரி இல்லை..! நயன்தாரா ‘தேங்க்ஸ்’ சொன்ன நடிகர்கள் பட்டியல்

0

நடிகை நயன்தாராவின் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி உள்ளநிலையில், இந்த ஆவணப்படத்தில் தான் நடித்த படங்களின் காட்சியைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தனுஷ் பெயர் இடம்பெறவில்லை என்பது கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி சினிமாக்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தனக்கான இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வரும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு உயிர் – உலகு என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவைப் பற்றி ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. அதன்கூடவே பெரும் சர்ச்சையும் உருவானது. நயன்தாராவின் ஆவணப்படத்தில், அவருடைய திருமண வீடியோ பெரும் பகுதி இடம்பெற்றுள்ளது. மேலும், நயன்தாரா நடித்த படங்களில் இருந்து சில காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பு, நடிகர் தனுஷ் குறித்து வெளியிட்ட அறிக்கை தமிழ் சினிமா உலகில் பெரும் சர்ச்சையானது. நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போதுதான் காதல் மலர்ந்தது என்பதால், அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இடம், நானும் ரௌடி தான் பட காட்சிகள் மற்றும் பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டு நயன்தாரா தரப்பு நடிகர் தனுஷை அணுகியுள்ளனர். இதற்கு இரண்டு வருடமாக தனுஷ் அனுமதி வழங்காமல் மறுத்து வந்ததாகவும், தன் மீது வன்மத்துடன் செயல்படுவதாகவும், 3 வினாடி காட்சிகளுக்காக ரூ. 10 கோடி கேட்டு வக்கில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு நயன்தாரா வெளியிட்ட கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் இரண்டு விதமான கருத்துகள் இதற்கு வந்தது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

நயன்தாராவின் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றுள்ள நிலையில், தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகளுக்கு, கேட்டதும் தடையில்லா சான்றிதழ் வழங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன், என தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தொடங்கி, ரெட் ஜெயன்ட் மூவிஸ், லைகா புரொடக்ஷன்ஸ், ஸ்டுடியோ கிரீன், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில், நானும் ரவுடிதான் தயாரிப்பாளர் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை என்பது கவனம் பெற்றுள்ளது.

Share.

Leave a Reply