சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்துக்காக ஜப்பான் சென்றிருந்த நடிகை மீனா, அங்கு ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து வந்தார். தற்போது இவர், நடிகை மகேஷ்வரியுடன் ஆட்டம் போட்ட வீடியோ ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ஃபேன்ஸ், ஏக்கத்தில் பெரு மூச்சு விட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சூப்பர் ஸ்டார் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்து பெயர் எடுத்த மீனா. அந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின் பருவ வயதை அடைந்த மீனா, என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், கமல், கார்த்திக், விஜய்காந்த், பிரபு, பிரபு தேவா, அஜித், முரளி என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.
மீண்டும் சினிமாவில்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை, கடந்த 2009ம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகரை திருமணம் செய்த கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார் நடிகை மீனா. இதைத்தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். கணவர் இந்த பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மீனா கடைசியாக தமிழில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தெலுங்கில் வெளியான ‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடித்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் நடிப்பில் எந்தப் படத்தையும் பார்க்க முடியவில்லை.
கப்பக்கிழங்கா? காரக்குழம்பா?: நடிகை மீனா, ஜப்பானில் நடைபெற்ற நெப்போலியன் மகனின் திருமணத்தில் கலந்து கொண்டார். அந்த திருமணத்தில் கலந்து கொண்ட குஷ்பு, சரத்குமார், சுஹாசினி, ராதாவுடன் ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார். மேலும், ஜப்பானை சுற்றி பார்த்துவிட்டு ஊர் திரும்பி உள்ள நடிகை மீனா, நடிகை மகேஷ்வரியுடன் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் இருவரும் தூள் படத்தில் வரும் இந்தாடி கப்பகிழங்கே.. ஹோய் என்னாடி கார குழம்பே.. ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இதைப்பார்த்த பேன்ஸ் வாவ் சூப்பர் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates