தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தற்சமயம் இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகின்றார். இதைத்தவிர நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார் தனுஷ். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவ்வாறு கைவசம் பல படங்களை வைத்துக்கொண்டு செம பிசியாக இருக்கும் தனுஷ் மீது சில சர்ச்சைகளும் இருந்து தான் வருகின்றது.
சமீபத்தில் நடிகை நயன்தாரா தனுஷ் மீது காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை தான் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி ஹாட் டாபிக்காக வலம் வருகின்றது. தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே நடந்த பிரச்சனைகள் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது.யார் பக்கம் நியாயம் உள்ளது என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
நிம்மதியே இல்லை..அமரன் திரைப்படத்தால் வந்த பிரச்சனை..வழக்கு தொடர்ந்த கல்லூரி மாணவர்..!
ஒருபக்கம் நயன்தாராவிற்கும் மறுபக்கம் தனுஷிற்கும் ரசிகர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.நிலைமை இவ்வாறு இருக்க இதற்கெல்லாம் வழக்கம்போல தனுஷ் ரியாக்ட் செய்யாமல் இருக்கின்றார். தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் இறுதிக்கட்ட பணிகளில் தனுஷ் பிசியாக இருக்கின்றார். விரைவில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. அதே சமயம் குபேரா படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
இந்நிலையில் தன்னை சுற்றி சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்க சைலண்டாக தனுஷ் சம்பவம் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். அதாவது 2025 ஆம் ஆண்டில் தனுஷ் மிகப்பெரிய சம்பவம் செய்யப்போவதாக தெரிகின்றது. அதாவது பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளார் தனுஷ். அதே மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் குபேரா படமும் வெளியாகவுள்ளது.
இதையடுத்து ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் ரிலீசாகவுள்ளது. இவ்வாறு மூன்று மாதங்களுக்குள் தன் மூன்று படங்களை தனுஷ் வெளியிட இருக்கின்றார். எனவே 2025 ஆம் ஆண்டு தனுஷின் ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான ராயன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் நூறு கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தல வேண்டாம் AK…உலகநாயகன் வேண்டாம் KH
இதன் காரணமாக தனுஷின் மார்க்கெட் அதிகரித்தது. தற்போது தனுஷ் ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றார். மேலும் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இந்நிலையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வேறெந்த பெரிய படங்களும் வெளியாகாத நிலையில் தனுஷ் தன் படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே கண்டிப்பாக அப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.