Actress Savitri : நூறு ஆண்டுகளை இந்த தமிழ் சினிமாவில் மிகசிறந்த நடிகையாக வலம்வந்தவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. மகத்தான பல சாதனைகள் படைத்த நடிகை அவர்.
இந்திய திரை உலகம் இருக்கும் காலம் வரையிலும் ஒரு நடிகையின் பெயர் உரக்க கூறப்படும் என்று கூறினால் அது நிச்சயம் சாவித்திரியின் பெயராகத் தான் இருக்கும். தமிழ் சினிமா என்பதை தாண்டி இந்திய திரையுலகமே மிரண்டு பார்த்த ஒரு மெகா ஹிட் நடிகை தான் சாவித்திரி. கடந்த 1934ம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 17வது வயதிலிருந்து நடிக்க தொடங்கினார். கடந்த 1951ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான “பாதாள பைரவி” என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து அதன் மூலம் தன்னுடைய கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் அவர்.