சென்னை: தமிழ் சினிமா மிக பிரபலமான நடிகரான பிரித்திவிராஜ், மலேசியாவைத் சேர்த்த ஷீத்தல் என்ற 23வயதே ஆன பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார். அண்மையில் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், தற்போது ஷீத்தலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
56 வயதான பப்லு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதைத் தொடர்ந்து ஹீரோ,வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என பல திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பப்லு முதல் மனைவியை பிரிந்து வாழ்த்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.
யாருக்கு என்ன பிரச்சனை: இருவருக்கும் இடையேயான நட்பு, காதலாக மாறியதைத் தொடர்ந்து இருவரும் லிவ்விங் டூ ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இந்த விவாகரம் வெளியில் தெரியவந்தத் தொடர்ந்து, 53 வயதான பப்லுவிற்கு 23 வயது பெண் கேட்கிறதா என்ற பல கடுமையான விமர்சனங்கள் வந்தன. அப்போது கூட பப்லு எனக்கு என்ன குறைச்சல் நான் இளமையாக இருக்கிறேன். அழகாக இருக்கிறேன், நான் ஷீத்தலுடன் இருப்பதால் யாருக்கு என்ன பிரச்சனை என்று பல கேள்விகளை முன்வைத்தார். அந்த நேரத்தில் பப்லு மற்றும் ஷீத்தலின் விவகாரம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியதால் இருவரும் திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள்.
பிரித்திவிராஜ்-ஷீத்தல் பிரிந்தனர்: இதைத்தொடர்ந்து, திடீரென இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு ஷீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவரும் சோசியல் மீடியாவில் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தனர். இதை பார்த்த பலரும், இவர்கள் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். இதுகுறித்து பேசிய பிரித்திவிராஜ் கோவமாக பேசி சரியான பதிலை சொல்லாமல் சென்று விட்டார். ஆனால், ஷீத்தல் இருவரும் பிரிந்து விட்டோம், பப்லு கொடுத்த அனைத்து பொருட்கள் பரிசு என அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என பிரிந்துவிட்டதாக கூறியிருந்தார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
மரணம் வரை உன்னுடன் வாழ விரும்புகிறேன்: இந்நிலையில் ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு ஆணின் கைகளை பிடித்து இருக்கும் படி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த பதிவில், கடவுள் நம் பிரார்த்தனைகளுக்கு எப்போதுமே பதிலளிப்பார். கடவுள் நமக்குச் சிறந்ததைத் தருகிறார், நாம் அவருடைய குழந்தைகளாக இருப்பதால் நம்மை அவர் பாதுகாப்பார். நான் எப்பொழுதும் கடவுளை நம்பியிருக்கிறேன், ஆனால் இப்போது நான் அவருடைய மந்திரத்தை உண்மையாக உணர்கிறேன். கடவுளின் ஆசீர்வாதம் எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் இருவர் மீதும் பொழியாட்டும், இந்த நாளிலிருந்து நல்லதோ கெட்டதோ, மரணம் நம்மைப் பிரிக்கும் வரை அன்பு வாழவே விரும்புகிறேன்.
கணவர் யார்: இது என் வாழ்க்கையில், மறக்கமுடியாத தருணம். என் அன்பானவனே, என் நண்பனே என்னுடைய மிகப் பெரிய ஆதரவைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டு ஷீத்தல் தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார். ஷீத்தலின் கணவர் சுமேஷ் ஒரு தடகள வீரர் ஆவார், இவர் ஜீம்மில் பயிற்சியாளராக இருக்கிறார். உமேஷ், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களின் உடலமைப்பு ரவிவாஸ் கிளாசிக்கில் வெற்றி பெற்றிருக்கிறார்.